டெல்லி: மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 2020- 21ம் நிதியாண்டில் தற்போதைய நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கானது கணித்த 3.5 சதவீதத்தினை விட 1.7 - 1.8 சதவீதம் புள்ளிகள் அதிகமாக இருக்கலாம் என்று மூத்த பொருளாதார நிபுணர் கூறியுள்ளார்.
அதே போல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜிடிபி விகிதத்தினையும் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையானது 5.2 - 5.3 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். 10 சதவீத பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படிடை நிலையானதாக இருந்தால், ஆண்டுக்கான நிதிப்பற்றாக் குறையானது 5.2 - 5.3 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட கடன் இலக்கில் 50 சதவீத அதிகரிப்பு காரணமாக இந்த நேரத்தில் வரவு செலவு திட்டத்தில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோயைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை, நாடு தழுவிய பூட்டுதல் மற்றும் பொருளாதாரம் மற்றும் மையத்தின் நிதி ஆகியவற்றில் அவற்றின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு மற்ற திட்டங்களைப் போலவே இதுவும் திருத்தப்படலாம் என்று சுப்பிரமணியன் அவர் கூறியுள்ளார்.
நிதியாண்டுக்கு 21க்கு வரவு செலவு செய்ய திட்டமிட்டதை விட, 4.2 டிரில்லியன் ரூபாய் அதிகமான கடன் வாங்க முடிவு செய்துள்ளது. ஆக மொத்த கடன் 12 டிரில்லியன் ரூபாயாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரையில் கடன் வாங்க அனுமதிப்பதின் மூலம், மாநிலங்களுக்கு 4.3 டிரில்லியன் டாலர் கூடுதல் கடன் வாங்க இடமளிக்கப்பட்டுள்ளது.
செலவு மற்றும் வருவாய்க்கு இடைவெளியிலான தொகையை கடன் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுக்கு கொரோனா தொற்று நோயின் காரணமாக செலவுகள் அதிகரித்து, வரவுகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக அரசு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டு அவரது வளர்ச்சிக்கான கணிப்புகள் என்ன கேட்ட போது, முதல் காலாண்டில் வளர்ச்சி மிக சுருக்கமாக இருக்கும் என்று சுப்ரமணியன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications