ஏற்றுமதி சரிவு, வியாபார சரிவு, வங்கிகளில் நிதி நெருக்கடி, என் பி எஃப் சி நிறுவனங்கள் திவால் ஆவது, ஜி எஸ் டி வரி செலுத்திய வியாபாரிகளுக்கு தகுந்த நேரத்தில் வரி ரீஃபண்ட் கொடுக்காதது, தேவை & நுகர்வு குறைவு, வேலை இல்லா திண்டாட்டம் என பல பிரச்னைகள் இந்தியாவில் அழுத்தமாக கால் ஊன்றி இருக்கின்றன.
எனவே செப்டம்பர் 2019 காலாண்டுக்கு, இந்தியாவின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட 4.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை யாராலும் மறைக்க முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

அடுத்து வரும் காலாண்டில் நல்ல வளர்ச்சி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் (Fundamental) மிக வலுவாக இருக்கின்றன, எனவே இந்தியாவின் ஜிடிபி தரவுகளும் வரும் 2019 - 20 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இருந்து அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
இவரைத் தொடர்ந்து மத்திய பொருளாதார விவகாரத் துறையின் செயலராக இருக்கும் அதானு சக்ரபர்த்தி "இந்தியாவில் இந்த ஆண்டில், இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் பாசிட்டிவாகத் தான் இருக்கின்றன" எனவும் சொல்லி இருக்கிறார்.
மறு பக்கம், கடந்த அக்டோபர் 2019-க்கான இந்தியாவின் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி, அக்டோபர் 2018 காலத்துடன் ஒப்பிடும் போது, 5.8 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
இந்தியாவின் ஒட்டு மொத்த தொழிற் துறை வளர்ச்சியில் சுமாராக 40 சதவிகிதத்துக்கு மேல் பிரதிபலிப்பது இந்த முக்கிய எட்டு துறைகள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய தொழிற் துறை வளர்ச்சி சரியும் போது ஜிடிபி மட்டும் ஏற்றம் காணுமா என்ன..?
கடந்த 25 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு இயங்கி வந்த சீனாவின் ஜிடிபி கூட, தன் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு இருக்கிறது.என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் நம் பொருளாதார ஆலோசகரோ... இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் (Fundamental) வலுவாக இருப்பதாகச் சொல்கிறார். எது எப்படியோ... இந்திய பொருளாதாரம் வளர்ந்தால் சரி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications