சென்னை: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளரான சீயாட், சென்னையில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் லாரி மற்றும் பேருந்துகளுக்கான ரேடியல் டயர்களுக்கான புதிய உற்பத்தி தளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாகப் புதன்கிழமை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருபக்கம் ஐடி சேவை துறையில் முதலீடுகள் குவிந்து வரும் வேளையில் உற்பத்தித் துறையிலும் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சியாட் நிறுவனத்தின் இந்த குறிப்பிடத்தக்க விரிவாக்கம் அடுத்த 12 மாதங்களில் தினசரி 1,500 டயர்களை உற்பத்தி செய்யும் திறனை இத்தொழிற்சாலை அடையும், இது நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சி உத்தியில் ஒரு முக்கிய மைல்கல் இது பார்க்கப்படுகிறது.

சென்னையில் எம்ஆர்எப் நிறுவனம் தான் மிகப்பெரிய டயர் உற்பத்தியாளராக இருக்கும் வேளையில், சியாட் நிறுவனமும் தனது உற்பத்தி திறனை அதிகரித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இந்த விரிவாக்கத்தின் மூலம் இறங்கியுள்ளது.
சீயாட் ஏற்கனவே சென்னை ஆலையில் கார் ரேடியல் டயர்கள் மற்றும் பைக் ரேடியல் டயர்களுக்கான உற்பத்தி தளத்தை நிறுவியுள்ளது. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள புதிய லாரி மற்றும் பேருந்து ரேடியல் டயர் உற்பத்தி ஆலையை அமைப்பது மூலம் அதிக செயல்திறன் கொண்ட டயர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இந்நிறுவனம் முயற்சி செய்கிறது.
சீயாட் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ அர்னாப் பேனர்ஜி, நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களில் இந்த முதலீடு முக்கியமானது என கூறியுள்ளார். "எங்கள் ஏற்றுமதி-மையப்படுத்தப்பட்ட சென்னை ஆலையில் இந்த புதிய உற்பத்தி தளத்தின் தொடக்கம், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்படச் சந்தைகளில் அனைத்து விதமான டயர்களையும் வழங்குவதில் ஒரு முக்கிய படியாக அமையும்" என்று கூறினார்.
உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் உயர்தர டயர்களை வழங்குவதற்கான சீயாட்டின் அர்ப்பணிப்பை இந்த விரிவாக்கம் வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications