சென்னையில் இருக்கும் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தனித்துவமான பொங்கல் பானையை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த பொங்கல் பானை ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரையில் அங்கு வைக்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பானையின் முக்கிய அம்சம் என்னவென்றால் பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தை ஒத்திருக்கும் வகையில் பொங்கல் பொங்கி வழியும் காட்சியை நேரில் காண்பது போல இந்த மொத்த செட்டப்பும் செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த பொங்கல் பானையில் நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது பலரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில் சிலர் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் மால்கள் போன்றவற்றுக்கு செல்லக்கூடும். இதனால் மக்கள் கூடும் இடமாக மால்-ஐ தேர்வு செய்து அந்த இடத்தில் புதுமையான அம்சத்தை ஸ்விக்கி நிறுவனம் செய்துள்ளது.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலுக்கு வரும் பார்வையாளர்கள் "பொங்கலோ பொங்கல்" என்று கூறும்போது ஒவ்வொரு நபருக்கும் ஒரு பரிசை இந்தப் பொங்கல் பானை வழங்குகிறது. குரல் அங்கீகார அமைப்புடன் பொங்கல் பானை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபரின் குரலை கண்டறிந்து பரிசை வழங்குகிறது.
முதலில் பொங்கலோ பொங்கல் என்ற சத்தத்தை ஆடியோ டிடெக்டர் பெற்று அதன் பிறகு டிஸ்பென்சிங் சிஸ்டத்தை சேர்கிறது. இதன் மூலம் அந்த இடத்திலேயே ஒரு பரிசு வழங்கப்படுகிறது. அனைத்து வயதினருக்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகமான தருணங்களை வழங்குவதற்காக கற்பனை செய்து ஸ்விக்கி நிறுவனம் இத்தகைய செட்டப்பை அமைத்துள்ளது.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்விக்கி நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி சிறியவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் அமைத்துள்ள இந்த பொங்கல் பானை செட்டப் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதோடு, இந்நிறுவனம் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் எவ்வளவு மதிப்பு வழங்குகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. சமூக ஊடகங்களில் இந்த பானையைப் பற்றிய பதிவுகள் பரவலாகப் பரவி வருகின்றன. சிலர் தங்களுடைய தனித்துவமான அனுபவத்தையும், ஸ்விக்கி இன்ஸ்டாமார்டின் இந்த முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அமைக்கப்பட்ட இந்த பொங்கல் பானை செட்டப், சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, இந்த வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications