கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருவது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிமெண்ட் விலை ஏற்கனவே சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு மூட்டைக்கு 10 முதல் 30 ரூபாய் வரை உயர்த்த சிமெண்ட் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிமெண்ட் விலை
குளோபல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் செய்தியின்படி நவம்பர் மாதத்தில் ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 10 முதல் 30 ரூபாய் வரை விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஏற்கனவே ஒரு மூட்டைக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வரை விலை உயர்ந்த நிலையில் சிமெண்ட் நிறுவனங்கள் மீண்டும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூலப்பொருட்கள் விலை
இதுகுறித்து குளோபல் நிறுவனம் மேலும் கூறுகையில், ' 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சராசரியாக சிமெண்ட் விலை மூன்று முதல் நான்கு ரூபாய் ஏற்றம் கண்டது. மாதந்தோறும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையின் அடிப்படையில் சிமெண்ட் மூட்டையின் விலை 2 முதல் 3 சதவீதம் உயர்ந்து வருகின்றன. கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு சதவீதமும் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் ஒன்று முதல் 2 சதவீதமும் சிமெண்ட் விலை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
ரூ.10 முதல் ரூ.30 வரை
இந்த ஆண்டு நவம்பர் மாதம் சிமெண்ட் நிறுவனங்கள் அனைத்து பிராந்தியங்களிலும் 10 முதல் 30 ரூபாய் வரை சிமெண்ட் விலையை ஏற்ற முயற்சிக்கின்றன என்றும் இந்த விலை உயர்வு அடுத்த சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எம்கே குளோபல் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டிடத்துறை
அக்டோபர் மாதத்தில் பண்டிகை காலம் இருந்ததால் சிமெண்ட் விலை ஏற்றம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் வரும் நாட்களில் கட்டிடத்துறையில் எழுச்சி பெறும் என்பதால் சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
பருவமழை தாமதம், பண்டிகை காலம் காரணமாக அக்டோபர் மாதத்தில் கட்டிடத் துறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் அதே நேரத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் அக்டோபர் மாதத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் தற்போது முக்கிய பண்டிகைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்க இருப்பதால் வரும் வாரங்களில் சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என்றும் அதனால் சிமெண்ட் விலையை உயர்த்த சிமெண்ட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட்
சிமெண்ட் விலை உயர்வு கண்டிப்பாக கட்டுமானத் துறையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது. சர்வதேச சந்தையில் சிமெண்ட் மூலப்பொருட்களின் விலை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அதனால் சிமெண்ட் உற்பத்தி செலவு குறையும் என்றும் ஆனால் சிமெண்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications