வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பதற்கு ஏற்ப நம்முடைய கனவு வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, ஒரு பக்கம் வங்கிக் கடன், கட்டுமான ஒப்புதல் போன்றவை இருந்தாலும், மறுபுறம் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பெரும் தலைவலியாக உள்ளது.
டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் பெரும்பாலான இடத்தில் சிமெண்ட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது பல வீட்டு கட்டுவோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் பல மாதங்களாக சிமெண்ட் விலை உயராமல் இருந்த வேளையில் தற்போது திடீரென உயர்ந்துள்ளது ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து சிமெண்ட் டீலர்கள் கூறுகையில், நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் அதிகரித்துள்ள டிமாண்ட் அடிப்படையாகக் கொண்டு விலை உயர்த்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் துறையில் நிறுவன கைப்பற்றல் அதிகமாக இருந்த காரணத்தால் தற்போது இதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
இந்திய சிமெண்ட் உற்பத்தியில் ஆதித்யா பிர்லா குழுமம் முதல் இடத்தில் இருந்தாலும், அதானி சிமெண்ட் பிரிவு இத்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது கைப்பற்றப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பெரும் தொகைக்கு வாங்கப்பட்டதால் இதன் தாக்கம் சிமெண்ட் விலையில் எதிரொலிக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்டது தான் என்றாலும், இது அடுத்த வருடம் தான் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதமே விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது சிமெண்ட் நிலை அதிகமாக உயர்ந்துள்ளது மேற்கு இந்தியாவில் தான், அங்கு 50 கிலோ சிமெண்ட் பேக் ரூ.5-10 வரை அதிகரித்துள்ளன.
மேற்கு இந்தியாவில் சிமெண்டின் புதிய விலை வரம்பு 50 கிலோ பைக்கு ரூ.350 முதல் ரூ.400 வரை உள்ளது. டெல்லியில், விலைகள் ஒரு பேக் ரூ.20 அதிகரித்து, பிராண்ட் மற்றும் தரத்தைப் பொறுத்து ஒரு பேக்கிற்கு ரூ.340 முதல் ரூ.395 வரை உள்ளது.
தென்னிந்தியாவில், சிமெண்ட் விலைகள் வரலாற்று ரீதியாக குறைவாக இருந்த இடத்தில், டீலர்கள் ஒரு சிமெண்ட் பேக்கிற்கு ரூ.40 வரை விலையை உயர்த்தியுள்ளனர், தற்போதைய விலை 50 கிலோ பைக்கு சுமார் ரூ.320 ஆக உள்ளது. நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், விலை உயர்வுகள் குறைவாக இருந்தாலும், அவை தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications