மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் கெசட்டில் அல்லாத லட்ச கணக்கான ஊழியர்களுக்கு 2020-21 நிதியாண்டுக்கு 78 நாள் சம்பளத்தைப் போனஸ் (productivity-linked bonus) ஆக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் போன்ஸ் ஆர்பிஎப் மற்றும் ஆர்பிஎஸ்எப் பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு மூலம் சுமார் 11.59 லட்சம் ரயில்வே ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் பலன் அடைவார்கள் என்று மத்திய அமைச்சரான அனுராங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்த 78 நாள் சம்பளம் போனஸ் மூலம் மத்திய அரசுக்கு 1,985 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கூடுதல் செலவாகும்.
ரயில்வே ஊழியர்களுக்குப் போனஸ்
மத்திய அரசு பொதுவாக ரயில்வே துறை ஊழியர்களுக்கான இந்த productivity-linked bonus அளவீட்டைத் தசரா பண்டிகையின் போது தான் அறிவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் நாடாளுமன்றத்தில் இந்தப் போனஸ் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
productivity-linked bonus என்றால் என்ன..?
இந்திய அரசு முதன்முதலாக கையில் இருந்த துறை இந்திய ரயில்வே துறை, இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ரயில்வே துறை முக்கிய உள்கட்டமைப்பாக இருக்கும் என நம்பியது.
இந்தச் சூழ்நிலையில் தான் ரயில்வே துறை ஊழியர்களுக்குப் போன்ஸ் அளிக்க முற்பட்ட போது 'The Payment of Bonus Act -1965' ரயில்வே துறைக்குப் பொருந்தாது என உணர்ந்து, இதே போனஸ் தொகையை மாற்று வழியில் அளிக்க வேண்டும் என்பதற்காக productivity-linked bonus கான்செப்ட்-ஐ 1979-80 ல் அறிமுகம் செய்யப்பட்டது.
பார்முலா
இந்தப் போனஸ் அளிக்க 23.9.2000ல் நடந்த கூட்டத்தில் ஒரு பார்முலா உருவாக்கப்பட்டது. இந்தப் பார்முலாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பின் 2012-13ல் 6வது சம்பள கமிஷன் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து அன்று முதல் இன்று வரையில் இந்தப் பார்முலா வாயிலாகவே கணக்கிட்டுப் போனஸ் அளிக்கப்பட்டு வருகிறது.
17,951 ரூபாய்
மேலும் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 78 நாள் சம்பளத்தில் கெசட்டில் பிரிவில் அல்லாத ஊழியர்கள் ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 7000 ரூபாய் பெற முடியும். அப்படிக் கணக்கிடும் போது அதிகப்படியான ஒரு ரயில்வே ஊழியர் 78 நாட்களுக்குச் சுமார் 17,951 ரூபாய் பெற முடியும்.
10 வருடம்
மத்திய அரசு 2010-11 நிதியாண்டில் இருந்து 2019-20 ஆண்டு வரையில் அனைத்துக் கெசட்டில் பிரிவில் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் 78 நாள் போனஸ் அளிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் 2020-21 நிதியாண்டுக்கு 78 நாள் சம்பளத்தைப் போனஸாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11.59 லட்சம் ரயில்வே ஊழியர்கள்
இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்தப் போனஸ் மூலம் 11.59 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். இதன் மூலம் இந்த வருடம் தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications