இந்தியாவில் ஓலா, ஊபர் , ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக வாடகைக்கு கார் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்து நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி வாடகை வாகன சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
பொதுவாக ஊபர், ஓலா உள்ளிட்ட செயலிகளில் வாடகை கார்கள், ஆட்டோக்களுக்காக புக் செய்யும் போது அது பீக் அவர் என்றால் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக காட்டும். சாதாரணமாக 200 ரூபாய் கட்டணம் கிடைக்கும் என்றால் பீக் அவர்களில் அது 300 ரூபாய்க்கு மேல் காட்டும். பீக் அவர்களில் அதிக டிமாண்ட் இருப்பதே இப்படி அதிக கட்டணம் காட்ட காரணம். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமான ஒரு விதிமுறையை கொண்டு வந்துள்ளது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் பீக் அவர்களில் வாகனங்களுக்கான வாடகையை இரண்டு மடங்கு வரை உயர்த்திக் கொள்ளலாம் என அனுமதி தந்திருக்கிறது. மத்திய அரசு தனிநபர் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக பயன்படுத்த அனுமதி கொடுத்திருக்கிறது.
மாநில அரசுகள் ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்றும் இந்த வாகனங்களுக்கான அடிப்படை வாடகை தொகையை நிர்ணயம் செய்துவிட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓலா,ஊபர் , ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்களில் பீக் அவர்களில் இந்த அடிப்படை கட்டணத்தில் இருந்து இரண்டு மடங்கு வரை அதிக கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் மாநில அரசுகள் இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் செயலிகள் வழியே ஒரு வாடிக்கையாளர் ஆட்டோ, கார் அல்லது பைக் டாக்ஸி முன்பதிவு செய்கிறார். அதனை ஏற்றுக் கொண்ட ஓட்டுநர் திடீரென பயணத்தை ரத்து செய்தால் அந்த அபராத தொகை அதிகபட்சம் 100 ரூபாய்க்குள் இருக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை ஓட்டுநரும், வாடகை வாகன சேவை வழங்கும் செயலி நிறுவனங்களும் ஏற்க வேண்டும்., ஒரு வேளை முன்பதிவு செய்துவிட்டு ஓட்டுநர் அந்த நோக்கி புறப்பட்ட பின்னர் வாடிக்கையாளர் ரைடினை ரத்து செய்தால் அவருக்கு 10% அபராதம் விதிக்கப்படும். மேலும் அனைத்து வாடகை வாகனங்களிலும் Vehicle Location and Tracking Devices பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் புறப்படும் இடத்தில் இருந்து தான் வாடகை கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும், வாடிக்கையாளர் ஏற்றிக் கொள்வதற்காக ஓட்டுநர் தான் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளரின் இடத்திற்கு பயணம் செய்யும் தூரத்திற்கு கட்டணம் வசூல் செய்ய கூடாது என அரசு கூறியுள்ளது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பியிடம் 10 லட்சம் ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸும் செயலிகள் தரப்பில் வழங்கப்பட வேண்டும். ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது புத்துணர்வு பயிற்சி அளிக்க வேண்டியது இந்த செயலிகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications