சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் தனியார்மயமாகிறதா.. உண்மை நிலவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரு வங்கிகள், ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் விவரங்களை, நிதி ஆயோக் அமைப்பு, பங்கு விலக்கல் குழுவிடம் வழங்கியுள்ளது.

 

கடந்த மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈரான் உடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை.. கச்சா எண்ணெய் விலை சரிவு..!

இந்த தொகையில், இரு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் அடங்கும்.

 நிதி ஆயோக் அறிக்கை

நிதி ஆயோக் அறிக்கை

தனியார்மயமாக்கப்படும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், நிதி ஆயோக்கிடம் உள்ளது. இது குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், தனியார்மயமாக்க வேண்டிய இரு பொதுத் துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் குறித்த விவரத்தினை மத்திய அமைச்சக செயலர் தலைமையிலான பங்கு விலக்கல் குழுவிடம், நிதி ஆயோக் அளித்துள்ளது.

பரிசீலனைக்கு பின்னர் தெரியும்

பரிசீலனைக்கு பின்னர் தெரியும்

இந்த அறிக்கை அடுத்து மாற்று திட்டக் குழுவின் பரிசீலனைக்கு செல்லும். இதையடுத்து, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்து ஒப்புதல் செய்த பின்னர், தனியார்மயமாக உள்ள இரு வங்கிகள், காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களை மத்திய அரசு வெளியிடும் என்றும் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது.

இரு வங்கிகள் எது?
 

இரு வங்கிகள் எது?

அதோடு அரசின் இந்த தனியார்மய நடவடிக்கையில் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யப்படலாம் செய்திகள் வெளியாகி வருகின்றன.

விரைவில் அறிவிப்பு வரலாம்

விரைவில் அறிவிப்பு வரலாம்

இது குறித்து அரசு விரைவில் ரிசர்வ் வங்கியிடமும் ஆலோசனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனியார் மயமாக்கல் குறித்து தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் இது குறித்தான அறிவிப்புகளும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார்மயம் நடவடிக்கை

தனியார்மயம் நடவடிக்கை

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஐடிபிஐ வங்கியன் பங்கு விற்பனைச் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள் ஓன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தனியார்மய நடவடிக்கையும் தற்போது வேகம் பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த வங்கிகள் தேர்வு செய்யப்படலாம்?

இந்த வங்கிகள் தேர்வு செய்யப்படலாம்?

சமீபத்தில் இந்த பங்கு விற்பனை குறித்த பட்டியலில் ஐஓபி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிலிருந்தன. இந்த நிலையில் மேற்கண்ட இந்த முயற்சியில் ஐஓபி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தேர்வு செய்யப்படலாம் என்றும், ஏனெனில் தற்போதைய நிலவரப்படி இந்த வங்கிகளில் மதிப்பு 44,000 கோடி ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Central bank, Indian overseas bank may be taken for privatization: check details here

Bank privatization latest updates.. Central bank, Indian overseas bank may be taken for privatisation: check details here
Story first published: Monday, June 7, 2021, 16:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X