தங்க நகை கொடுத்தா 10 நிமிஷத்துல கடன் வழங்கும் மெஷின்.. வெளிநாட்டுல இல்ல நம்ம தமிழ்நாட்டுல..

பரமக்குடி, ராமநாதபுரம்: சாதாரண மக்கள் அவசர பண தேவை என்றால் உடனடியாக தங்களிடம் இருக்கும் தங்கத்தை தான் வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து கடன் வாங்குவார்கள். அந்த வகையில் இந்தியாவில் தங்க நகை கடன் சந்தை என்பது மிகப்பெரியது.

தங்க நகை கடன்: வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்க நகை கடன் வழங்கும் நடைமுறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றன . அப்படி தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தங்க கடன் ஏடிஎம் இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செயல்பட்டு வரக்கூடிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தான் இந்த புதிய தங்க கடன் ஏடிஎம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தங்க நகை கொடுத்தா 10 நிமிஷத்துல கடன் வழங்கும் மெஷின்.. வெளிநாட்டுல இல்ல நம்ம தமிழ்நாட்டுல..

தமிழ்நாட்டில் முதல்முறை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் வாராங்கலி ஏஐஅடிப்படையிலான தங்க கடன் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. மார்ச் மாதம் அங்கே இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது தமிழ்நாட்டிலும் தங்க கடன் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது.

நேரத்தை மிச்சப்படுத்தும்: பொதுவாக தங்க நகை கடன் வாங்க வேண்டும் என்றால் நாம் வங்கிக்கு சென்று நம்முடைய நகையை வழங்க வேண்டும். அவர்கள் தரம் பார்த்து அதற்கு எவ்வளவு விலை வட்டி என்பதை எல்லாம் கூறுவார்கள். இதற்காக நாம் ஒரு கடன் கணக்கினை தொடங்க வேண்டும். பின்னர் நமது கணக்கில் பணத்தை செலுத்துவார்கள். இந்த நடைமுறைக்கு சில மணி நேரங்கள் எடுக்கும்.

எப்படி செயல்படுகிறது?: ஆனால் தங்க கடன் வழங்கக்கூடிய ஏடிஎம் இயந்திரம் 10 முதல் 12 நிமிடங்களுக்குள் தங்க கடனை செயலாக்கம் செய்து உங்களுக்கான கடனை வழங்கிவிடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையில் இந்த இயந்திரமானது செயல்படுகிறது. பொதுமக்கள் தாங்கள் கடனாக வைக்க இருக்கும் தங்க நகையை கொண்டு சென்று இந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பெட்டியினுள் வைத்துவிட வேண்டும். இதனை அடுத்து இயந்திரம் அந்த பெட்டியில் வைக்கப்பட்ட நகையின் தரம் மற்றும் எடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும்.

10% தொகை ரொக்கமாக கிடைக்கும்: பின்னர் சந்தை விலைக்கு ஏற்ப வங்கி நிர்ணயம் செய்துள்ள கடன் தொகை ஆகியவற்றுடன் கணக்கீடு செய்து இயந்திரம் இந்த நகை இவ்வளவு எடை இருக்கிறது , இதற்கு இவ்வளவு கடன் உங்களுக்கு கிடைக்கும் என்பதை திரையில் காண்பிக்கும். அந்த பணம் உங்களுடைய தேவைக்கு பொருத்தமானதாக இருக்கிறது என்றால் நீங்கள் அதற்கு சரி என கொடுக்கலாம். உடனடியாக உங்களுக்கு கடன் தொகை வந்துவிடும். உதாரணமாக நீங்கள் 1 லட்சம் ரூபாய் கடன் பெறுகிறீர்கள் என வைத்துக்கொண்டால் அதில் 10 சதவீதம் தொகை அதாவது 10,000 ரூபாய் அந்த இயந்திரத்திலேயே ரொக்கமாக வந்துவிடும். மீதமுள்ள 90 ஆயிரம் ரூபாய் உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த தங்க நகை கடன் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த முடியும். தங்க நகை கடன் வழங்கக்கூடிய ஏடிஎம் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு பெருமளவில் நேரம் மிச்சமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+