நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வங்கித்துறை பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இப்படியொரு மந்த நிலைக்கு மத்தியிலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இந்தியா 155 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளாதாக அறிவித்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இது முந்தைய ஆண்டில் 718 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் 15% அதிகரித்து 7,278 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6,329 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே நிகரவட்டி வருவாய் 11.34% அதிகரித்து 2,022 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,816 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போல் இந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இயக்க லாபம் 1,696 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 137.20% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 715 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே மூன்றாம் காலாண்டில் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு அளவு 13,568.05 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 15,605.07 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது கிட்டதட்ட 13% குறைந்துள்ளது.
மேலும் கடந்த 2018 - 19ம் ஆண்டில் மொத்த வாராக்கடன் அளவு 32,356.04 கோடி ரூபாய் மொத்த வாராக்கடன் அளவு அறிவித்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி இதை 34,921.04 கோடி ரூபாயாக மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வாராக்கடன் அளவு 11,333.24 கோடி ரூபாயாக மதிப்பிட்டுள்ளது இவ்வங்கி. ஆனால் ரிசர்வ் வங்கி இதை 13,898.24 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இது 2,565 கோடி ரூபாய் விலகலுக்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலை 1.29% வீழ்ச்சி கண்டு 19.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications