இந்தியா முழுவதும் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பள கமிஷன் அறிவிப்புக்காக காத்திருக்கும் வேளையில், ஒவ்வொரு வருடமும் 2 முறை மாற்றப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஜனவரி மாதத்திற்கு மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
2026 ஜனவரி முதல் அமலாகும் அகவிலைப்படி உயர்வுக்கு நவம்பர் மாதத்தின் AICPI-IW தரவு வெளியாகியுள்ளது. இது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் 8வது சம்பள கமிஷன் அறிமுகத்திற்கு முன்பு வரும் காரணத்தால் டபுள் கொண்டாட்டமாக உள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது 58 சதவீதமாக உள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான உயர்வு 2 அல்லது 3 சதவீதமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. டிசம்பர் தரவு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் போதே இது உறுதியாகும்.
அகவிலைப்படி உயர்வு கணிப்பு
நவம்பர் மாத AICPI-IW சராசரி புள்ளிகள் 145.17 ஆக உள்ளது. இதன்படி அகவிலைப்படி ஃபார்முலா படி 59.93 சதவீதம் வருகிறது. அதை அரசு ரவுண்ட் ஆஃப் செய்து 60 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் தரவு சற்று உயர்ந்தால் 3 சதவீத உயர்வுக்கும் சாத்தியமாகும். இந்த உயர்வு ஜனவரி 2026 சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் எதிரொலிக்கும்.
2025 ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டு 58 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு முன் ஜனவரி 2025 இல் 2 சதவீத உயர்வுடன் 55 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வின் மூலம் அரசு ஊழியர்கள் நாட்டில் நிலவும் பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். AICPI-IW குறியீடு நாட்டில் நிலவும் பணவீக்க அளவை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி கணக்கிட பென்ச்மார்க் செட் செய்கிறது.
8வது சம்பளக் கமிஷன்
இந்த அகவிலைப்படி உயர்வு 8வது சம்பளக் கமிஷன் அமலாக்கத்திற்கு முன் வருவதால், தற்போதைய அடிப்படை ஊதியத்தில் பிரதிபலிக்கும். சம்பள கமிஷன் அமலான பிறகு அகவிலைப்படி புதிய ஊதிய அமைப்பில் கணக்கிடப்படும். இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications