வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் நாட்டின் விலைவாசி நிலவரத்தை அடிப்படையாக கொண்டு நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்குகிறது.
அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சம்பளம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வினை அரசு வழங்குகிறது. ஜனவரி மாதத்தில் ஒரு அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தில் ஒரு அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டும்.

வழக்கமாக ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை அரசு மத்திய அரசு ஹோலி பண்டிகை பரிசாக அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை முடிந்துவிட்டது இருந்தும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் அண்மையில் அகவிலைப்படியை உயர்த்திய நிலையில் மத்திய அரசும் அதே போல அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு அது நடக்கவில்லை. ஏற்கனவே எட்டாவது சம்பள கமிஷனே தாமதம் ஆகியிருக்கிறது தங்களுக்கு சம்பள உயர்வு இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகிறது என கவலையில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வாவது சரியான நேரத்தில் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுவரை அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த தகவலை வெளியிடவில்லை.
தற்போது அரசு ஊழியர்களுக்கு 58% அகவிலைப்படி கிடைக்கிறது. அனைத்து இந்திய நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுதான் அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தி வழங்குவது என்ற முடிவு எடுக்கப்படும் டிசம்பர் மாதத்தில் இது 148.2 ஆகவும் ஜனவரியில் 148.6 ஆகவும் இருந்தது. இதன்படி கணக்கீடு செய்து பார்க்கும் போது இரண்டு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய அரசு இம்மாத மத்தியிலேயே அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது 58 சதவீதமாக இருக்கக்கூடிய அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டால் 60% ஆகும். அடிப்படை சம்பளம் 40,000 ரூபாயாக இருக்கக்கூடிய ஒரு நபருக்கு 24,000 ரூபாய் அகவிலைப்படியாக கிடைக்கும். அதுவும் ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு அரியர் தொகையும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதற்கிடையே 8ஆவது சம்பள கமிஷன் தனது பணிகளை தொடங்கியுள்ளது. பல்வேறு துறை அமைச்சகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசு ஊழியர்களுக்கான யூனியன்களும் 3 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை கொண்டு சம்பள உயர்வை கணக்கிட வேண்டும், குடும்ப அலகினை 3 என்பதில் இருந்து 5ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications