8th pay commission முன் அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மார்ச் மாதம் பொறந்தா பணம் கொட்டும்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance - DA) 2% உயரும் என்ற எதிர்பார்ப்பு பலமாகி வருகிறது. டிசம்பர் 2025 அகில இந்திய தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீட்டு (AICPI-IW) 148.2 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் DA 58%லிருந்து 60%க்கு உயரும் என்று கணிக்கப்படுகிறது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் இந்த அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக மத்திய அரசு அகவிலைப்படி அறிவிப்பை வருடத்தில் 2 முறை அறிவிக்கும், இந்த 2 முறையும் முக்கிய பண்டிகைக்கு முன்பு அறிவிக்கும்.

8th pay commission முன் அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மார்ச் மாதம் பொறந்தா பணம் கொட்டும்..!!

ஆதாவது ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது அறிவிக்கும். இதன் படி மார்ச் 3, 2026 அன்று ஹோலி பண்டிகை வருவதால், அரசு ஊழியர்கள் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு அதற்கு முன் வரும் என்று நம்புகின்றனர்.

DA அறிவிப்பு எப்போது வரும்?

மத்திய அரசு DA-வை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில். ஆனால் அறிவிப்பு சரியாக அந்த மாதங்களில் வருவதில்லை. பெரும்பாலும் ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு முன் அறிவிக்கப்படுகிறது.

உதாரணமாக, 2025இல் ஹோலி மார்ச் 14ஆம் தேதி இருந்தாலும் DA மார்ச் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது DA அக்டோபர் 1ஆம் தேதி தீபாவளிக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டும் ஊழியர் சங்க தலைவர்கள் ஹோலிக்கு முன் அறிவிப்பு வரும் என்று நம்புகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு ஆணை மூலமாக மட்டுமே தெரிய வரும்.

DA ஏன் முக்கியம்?
DA என்பது விலைவாசி உயர்வை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் சம்பளம். ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஊதிய குழு (Pay Commission) மூலம் இதன் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. DA ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது.

உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால், தற்போது DA 58% ஆக இருக்கும் வேளையில் ரூ.10,440 கிடைக்கும், இதன் மூலம் ஒரு அரசு ஊழியரின் மொத்த சம்பளம் ரூ.28,440 ஆக கிடைக்கும். DA 60% ஆக உயர்ந்தால் ரூ.10,800 கிடைக்கும். இதனால் மொத்த சம்பளமும் உயரும். DA-யுடன் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), ஆண்டு உயர்வு (3%), மற்ற சலுகைகளும் கிடைக்கும்.

8th pay commission முன் அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மார்ச் மாதம் பொறந்தா பணம் கொட்டும்..!!

ஏன் அடிப்படை சம்பளம் இப்போது மாறாது?
7வது ஊதிய கமிஷன் 2025 டிசம்பரில் முடிந்தது. 8வது ஊதிய கமிஷன் அமைக்கப்பட்டு செயல்படுத்துவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம். அதுவரை அடிப்படை சம்பளம் மாறாது. எனவே DA மட்டுமே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயரும் என்பதால் விலைவாசியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

DA எப்படி கணக்கிடப்படுகிறது?
DA பணவீக்க தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. AICPI-IW குறியீடு 12 மாத சராசரியைப் பயன்படுத்தி, உணவு, உடைகள், போக்குவரத்து போன்ற அன்றாட பொருட்களின் விலை உயர்வை அளவிடுகிறது. பணவீக்கம் உயர்ந்தால் DA உயரும், குறைந்தால் உயர்வு குறைவாக இருக்கும்.

மொத்தத்தில், DA 2% உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். இது பணவீக்கத்தை சமாளிக்க உதவும். ஊழியர்கள் இப்போது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+