டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு என அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு , ஊழியர்கள் இந்த காரணத்திற்காக 30 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுப்பதற்கு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் , மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது உட்பட தனிப்பட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் என பதிலளித்திருக்கிறார். மத்திய குடிமைப் பணிகள் விதி 1972 இன் படி மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் அதனை வயதான பெற்றோரை கவனித்து கொள்வது உட்பட தனிபட்ட காரணங்களுக்காகவும் எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பினை தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 நாட்கள் அரை சம்பளம் விடுப்பு , 8 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் 2 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த விடுப்புகளை வயதான பெற்றோரை கவனிப்பது உட்பட எந்த ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு தொடர்பான விதிமுறைகள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மகப்பேறு கால விடுப்பு ,குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்வதற்கான விடுப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்பு மற்றும் காயங்களுக்கான விடுப்பு, துறை சார்ந்த விடுப்பு , படிப்பதற்கான விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது .
ஆண்டு தோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த விடுப்பு கணக்கு என்பது அப்டேட் செய்யப்படும் அவர்களின் கணக்கில் இதுவரை பயன்படுத்திருக்க கூடிய விடுப்புகள் என்னென்ன, எவ்வளவு பேலன்ஸ் இருக்குது என்பதை அதில் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications