அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக அதிகரிப்பு.. கூடுதலாக எவ்வளவு சம்பளம் கிடைக்கும்..?!

மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள் நீண்ட காலமாகக் காத்துக்கொண்டு இருக்கும் இந்த முக்கியமான கிராக்கிப்படி அளவீட்டை மத்திய அரசு உயர்த்துள்ளது. இந்த உயர்வின் மூலம் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் கூடுதலாகக் கையில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும்.

 அமைச்சர் அனுராக் தாக்கூர்

அமைச்சர் அனுராக் தாக்கூர்

இன்று மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர் வெளியிட்ட அறிவிப்பின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி அளவீட்டை (Dearness Allowance or அகவிலைப்படி) அளவீட்டை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், இப்புதிய உயர்வு ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.

கிராக்கிப்படி

கிராக்கிப்படி

கிராக்கிப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் ஒரு முக்கியமான பகுதி, இந்தக் கிராக்கிப்படி உயர்த்தப்படும் போது கணிசமான தொகை சம்பளத்திலும் உயர்வும்.

 மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாகக் கிராக்கிப்படி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கிராக்கிப்படி உயர்வு ஒய்வுதியம் பெறுபவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

மத்திய அரசு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிராக்கிப்படி உயர்வைத் தடை செய்து அந்தத் தொகையைக் கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒருவருடமாகக் கிராக்கிப்படி பெறாமல் மத்திய அரசு ஊழியர்கள் இருந்தனர்.

 DA 28 சதவீதமாக உயர்வு

DA 28 சதவீதமாக உயர்வு

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி அளவை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கிராக்கிப்படியில் சுமார் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் சம்பள கூடுதலாகக் கிடைக்கும்.

 சம்பள உயர்வு

சம்பள உயர்வு

மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ள அறிவிப்பின் படி கிராக்கிப்படி அளவை 28 சதவீதத்தில் கணக்கிட்டும் போது குறைந்தபட்சம் 2000 ரூபாய் மூலம் 6200 ரூபாய் வரையில் கூடுதலாக மத்திய அரசு ஊழியர்கள் கையில் கிடைக்கிறது.

 7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

அதாவது 7வது சம்பள கமிஷன் படி ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் முதல் 56,900 ரூபாய் வரையில் இருக்கும்.

இதன் படி 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கியவர், இதுநாள் வரையில் கிராக்கிப்படியாக 3,060 ரூபாய் பெற்று இருப்பார், தற்போது அறிவித்துள்ள 28% கிராக்கிப்படி மூலம் 5,040 ரூபாய் பெறுவார்.

 

 வருடம் 23,760 ரூபாய்

வருடம் 23,760 ரூபாய்

இந்த 11 சதவீத கிராக்கிப்படி உயர்வின் மூலம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒரு மத்திய அரசு ஊழியருக்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1,980 ரூபாய் கிடைக்கும், இதுவே வருடத்திற்கு 23,760 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும்.

 அதிகப்படியான உயர்வு

அதிகப்படியான உயர்வு

அதிகப்படியாக 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்குவோருக்கு 9,673 ரூபாய் கிராக்கிப்படியில் இருந்து 15,932 ரூபாய் பெறுவார். அதாவது கூடுதலாக மாதம் 6,259 ரூபாயும், வருடத்திற்கு 75,108 ரூபாயும் பெறுவார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+