மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இருந்தாலும் இந்த பத்து ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நாட்டின் பண வீக்கத்திற்கு ஏற்பவும் விலைவாசி உயர்வுக்கு ஏற்பவும் அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட சதவீத தொகை அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் பெறுகின்றனர். அடிப்படை சம்பளத்தில் 58% தொகை அகவிலைப்படியாக கிடைக்கிறது. அதாவது ஒரு அரசு ஊழியருக்கு 7ஆவது சம்பள கமிஷனில் அடிப்படை சம்பளம் 40,000 ரூபாய் என இருந்தால் அதில் 58% அதாவது 23,200 ரூபாய் அகவிலைப்படியாக கிடைக்கிறது. இத்துடன் போக்குவரத்துக்கான அலோவென்ஸ், வீட்டு வாடகை அலோவென்ஸ் ஆகியவை சேர்த்து கையில் கிடைக்கும் சம்பளம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கும்.

இந்த ஆண்டு எட்டாவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் ஊழியர்களுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷன் தற்போது தான் தன்னுடைய பணிகளை தொடங்கி இருக்கிறது என்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய சம்பளம் நடைமுறைக்கு வராது. எனவே அதுவரை ஆண்டுக்கு இரண்டு அகவிலைப்படி உயர்வு கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என அரசு விளக்கம் தந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்திலும் ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரிக்கான அறிவிப்பு வழக்கமாக மார்ச் மாதத்தில் வெளியாகும். ஆனால் ஜனவரி முதல் அது கணக்கிடப்பட்டு மீதம் உள்ள பணம் என்பது அரியர் தொகையாக கிடைத்துவிடும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு குறியீடு தான் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு. தற்போது இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு வெளியிடப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் வகையில் இருக்கிறது . நவம்பர் மாதத்தில் இருந்த 148.2 என்ற அளவிலேயே டிசம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
அப்படி என்றால் இதன் அடிப்படையில் கணக்கீடு செய்து பார்க்கும் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% வரை அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால் தற்போது வாங்கக்கூடிய அடிப்படை சம்பளத்தில் 63 சதவீதம் தொகை அகவிலை படியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். ஏப்ரல் மாத சம்பளத்தில் இந்த அகவிலைப்படியும், ஜனவரி முதல் வழங்க வேண்டிய பாக்கி பணம் அரியர் பணமாகவும் வழங்கப்பட்டு விடும்.எனவே 40,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட ஒரு ஊழியருக்கு அகவிலைப்படி 25,200 ரூபாய் அதாவது முன்பை விட கூடுதலாக 2000 ரூபாய் சம்பளத்தில் சேர்த்து கிடைக்கப் போகிறது. இத்துடன் போக்குவரத்து அலொவென்ஸும் உயரும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications