மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் முக்கியமான நிதி பாதுகாப்பில் கிராஜுவிட்டி மிக முக்கியமானது. தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் வரும் ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி எப்போது முழுமையாக கிடைக்கும், எப்போது வரம்பு விதிக்கப்படும், டபுள் கிராஜுவிட்டி ஆகியவற்றில் இருந்த குழப்பத்தை போக்கும் வகையில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சமீபத்தில் முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சிசிஎஸ் விதிகளின் விதி 4ஏ அடிப்படையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மறு நியமனத்தில் இரட்டை கிராஜுவிட்டி
ஒரு மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்று கிராஜுவிட்டி பெற்ற பிறகு மீண்டும் அதே அமைப்பில் பணியமர்த்தப்பட்டால், இரண்டாவது பணிக்காலத்துக்கு தனி கிராஜுவிட்டி வழங்கப்பட மாட்டாது. சூப்பர்அன்னுவேஷன், ரிட்டயரிங் கிராஜுவிட்டி அல்லது வேறு வகை ஓய்வு கிராஜுவிட்டி ஒருமுறை பெற்றுவிட்டால், மறு நியமனத்தில் மீண்டும் அதை கோர முடியாது. இது இரட்டை நன்மையை தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

பொதுத்துறை மற்றும் மாநில அரசு ஊழியர்கள்
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு அனுமதி பெற்று மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்கள் முந்தைய இடத்தில் பெற்ற கிராஜுவிட்டியை தக்க வைத்துக்கொள்ளலாம். அதோடு மத்திய அரசு பணிக்கான கிராஜுவிட்டியும் கிடைக்கும். ஆனால் இரு இடங்களில் இருந்தும் மொத்த பணி காலத்திற்கும் கிராஜுவிட்டி பெற முடியாது, இதோடு இந்த ஊழியர் பெறும் மொத்த தொகைக்கு உச்ச வரம்பு உள்ளது.
உச்ச வரம்பு என்பது ஒரு மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர் தொடர்ந்து மத்திய அரசில் மட்டுமே பணியாற்றியிருந்தால் அவருக்கு கிடைக்கும் தொகை தாண்ட கூடாது என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது பொதுத்துறை நிறுவனத்திலும், மத்திய அரசு பணியிலும் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக கிராஜுவிட்டி கிடைக்கும் பட்சத்தில் இது குறைக்கப்படும்.
இதே விதி மாநில அரசு பணியில் இருந்து மத்திய அரசுக்கு மாறியவர்களுக்கும் பொருந்தும். மேலும் கிராஜுவிட்டி கணக்கிடும் போது இறுதியாக பெற்ற சம்பளமும், மொத்த பணிக்காலமும் அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முழு கிராஜுவிட்டி
இந்த உத்தரவில் அதிகளவில் நன்மை பெறுபவர்கள் யாரெனில் முன்னாள் ராணுவ வீரர்கள் தான். ராணுவத்தில் பணியாற்றி முடித்து கிராஜுவிட்டி பெற்ற பிறகு ஒருவர் சிவில் பணியில் சேரும் பட்சத்தில், ராணுவ பணியில் கிடைக்கும் கிராஜுவிட்டிக்கும், சிவில் பணியில் கிடைக்கும் கிராஜுவிட்டிக்கும் எந்த வரைமுறை கட்டுப்பாடுகள் இல்லை. 2 பணியிலும் முழுமையான கிராஜுவிட்டி அவருக்கு கிடைக்கும்.
மத்திய செலவுத்துறையுடன் ஆலோசித்த பிறகு மத்திய அரசு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இரு பணிகளுக்குமான முழு கிராஜுவிட்டியை பெற முடியும்.
இந்த புதிய விளக்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளில் தெளிவு கிடைத்துள்ளது. கிராஜுவிட்டி-யில் தற்போது விதிமாற்றம் மூலம் இரட்டை பலன் தவிர்க்கப்படுவதால் அரசுக்கு நிதி சுமை குறையும். அதே நேரம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முழு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications