சென்னை: அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்திற்கான வரம்புகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்த அகவிலைப்படி அதிகரிப்பைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்திற்கான வரம்புகளை மத்திய அரசு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தியது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) மற்றும் விடுதி மானியம் ஆகியவை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, மார்ச் 12 ஆம் தேதி, நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
போன மாதம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்தது. மார்ச் 7ஆம் தேதி அன்று, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த உயர்வு சுமார் ஒரு கோடி அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொகை மூன்று மாத அரியர் தொகையுடன் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கல்வி உதவித் தொகையிலும் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது.
பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின் படி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான தொகை ரூ. 2,812 ஆகவும் மற்றும் விடுதி மானியம் ரூ. 8,437.5 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வழக்கமான தொகையை விட இருமடங்கு பெறலாம் என்றும், மேலும், மாதத்திற்கு ரூ.5,625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான, குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை மாதம் ரூ.3,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் குறைபாடுகள் உள்ள பெண் ஊழியர்களுக்கு இது கூடுதல் உதவியை வழங்குகிறது.
இந்த மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்?: இந்த திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications