இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இனி இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் குறிப்பிட்ட ஒரு செயலி கட்டாயம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மக்களால் டெலிட் செய்ய முடியாத வகையில் அது இருக்க வேண்டுமென்றும் மத்திய அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைய வளர்ச்சி அடைய மோசடியாளர்களும் புதுப்புது ஐடியாக்களோடு மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் . குறிப்பாக ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதனால் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. ஸ்மார்ட்போன் பெருகிவிட்ட இந்த காலத்தில் நம்முடைய போனை ஹேக் செய்வது உள்ளிட்ட செயல்கள் மூலம் நம் பணத்தை திருடும் போக்கும் உயர்ந்து வருகிறது .

இந்த சூழலில் தான் மத்திய அரசு இந்தியாவில் இனி விற்பனை செய்யப்படக்கூடிய அனைத்து புதிய ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான சஞ்சார் சாத்தி (sanchaar saathi) மொபைல் செயலி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும் என மொபைல் போன் விற்பனை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது . இந்தியா உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக இருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஸ்மார்ட் போன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தொலைதொடர்பு துறை அமைச்சகம் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும் இதன்படி அடுத்த 90 நாட்களுக்குள் புதிதாக விற்பனை செய்யப்படக்கூடிய அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இனி சஞ்சார் சாத்தி செயலி ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும், நவம்பர் 28ஆம் தேதியே அரசு அனைத்து ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை அனுப்பி வைத்திருக்கிறது என்றும் அந்த செய்தி கூறியது.

புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ 90 நாட்கள் அவகாசமும், ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள அனைத்து சாதனங்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த செயலியை செல்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
மத்திய அரசு பிக் பிரதர் போல செயல்படுகிறது, இது மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பறிக்கிறது என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இந்த சூழலில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்கள் இந்த செயலியை போனில் வைத்திருப்பது கட்டாயமில்லை, விருப்பமில்லை என்றால் டெலிட் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி இதுவரை சுமார் 6 லட்சம் காணாமல் போன போன்களை கண்டுபிடிக்கவும் உதவி செய்திருக்கிறது . இந்த செயலியை போனில் இன்ஸ்டால் செய்திருந்தால் குடிமக்கள் சந்தேகத்திற்கு இடமான மோசடி தொடர்பான புகார்கள் ,சைபர் குற்றங்கள் , நிதி மோசடிகள் தவறான நோக்கங்களுக்காக யாரேனும் அழைப்பு விடுத்தாலோ அல்லது எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பினாலோ புகார் அளிக்க முடியும் . மேலும் சஞ்சய் சாந்தி அப்ளிகேஷனை பயன்படுத்தி தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களை கண்டறிய முடியும்.
உங்கள் சாதனத்தை அனைத்து தொலைதொடர்பு ஆபரேட்டர் நெட்வொர்க்கில் இருந்து பிளாக் செய்யவும் உதவும். எனவே தொலைந்து போன அல்லது உங்களிடம் இருந்து களவாடப்பட்ட சாதனங்களை யாராலும் பயன்படுத்த முடியாது. ஒருவேளை யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அவை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் ட்ராக் செய்ய முடியும் சஞ்சய் சார்தி செயலி மூலம் உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை சரி பார்க்கலாம் மேலும் தங்களுக்கு வரக்கூடிய தேவையற்ற வெளிநாட்டு அழைப்புகள் குறித்து புகார் அளிக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications