மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 31 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்க உள்ளது மட்டும் அல்லாமல் ஜூலை 1, 2022 முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுகட்டக் கூடுதல் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு கோரிக்கப் பல வாரங்களாக ஒப்புதல் அளிக்கப்படாமல் காத்திருக்கும் நிலையில் சரியாக விழாக்காலத்தின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1.77 கோடி பேர்

1.77 கோடி பேர்

இந்த 4 சதவீத உயர்வு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 31 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயரும். இதேபோல் 47.68 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்ச ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள்.

ஜூலை 1 முதல்

ஜூலை 1 முதல்

4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலாக்கம் செய்யப்படும் காரணத்தால் இந்த மாத சம்பளத்தில் 3 மாதத்திற்கான அரியர் தொகையும் வரவு வைக்கப்படும். இது மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் வருமானத்தை அளிக்கும்.

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள்

இந்த அறிவிப்பால் மத்திய அரசுக்கு வருடம் 6,591.36 கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை உருவாகும். நடப்பு நிதியாண்டில் ஜூலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலம் வரையில் 4,394.24 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஏற்படும், இது அனைத்தும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மட்டுக்குமானது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசி பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் பென்ஷன் தொகையைச் சுமார் 68.62 லட்சம் பேர் பெறுகின்றனர். இவர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் அரசு வருடம் 6,261.20 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

ரூ.12,852.56 கோடி கூடுதல் செலவு

ரூ.12,852.56 கோடி கூடுதல் செலவு

47.68 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்ச ஓய்வூதியதாரர்களுமான 4 சதவீத அகவிலைப்படியைச் சேர்த்தால் வருடத்திற்கு 12,852.56 கோடி ரூபாய் கூடுதல் செலவுகளை மத்திய அரசு ஏற்கிறது. இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் வேளையில் இது கூடுதல் சுமையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+