டெல்லி: மத்திய அரசு கூடிய விரைவில் 8ஆவது ஊதிய குழு தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அரசு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் பலன்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
கிட்டதட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எப்பொழுது 8ஆவது ஊதிய குழு அமைக்கப்படும் என்பது குறித்து அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

இந்த ஊதிய குழு அமைக்கப்பட்ட உடன் இவர்கள் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான தொகை ஆகியவை பெரிய அளவில் மாற்றமடையும். வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டிலேயே அல்லது அதற்கு முன்னதாகவே அரசு 8ஆவது ஊதியக்குழுவை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என சொல்லப்படுகிறது.
8ஆவது ஊதிய குழு நியமனம் செய்யப்பட்டு அந்த ஊதியக்குழு வழங்கும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. அவ்வாறு 8ஆவது ஊதிய குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அதிகரிக்கும்.
அரசு தரப்பில் இதுவரை அடுத்த ஊதியக்குழு அமைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் கூடிய விரைவில் அந்த தகவல் வெளிவரும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு 2.86 மடங்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. National Council of the Joint Consultative Machinery அளித்த பரிந்துரையான fitment factor 2.86 என்பதன் அடிப்படையில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
ஃபிட்மன்ட் ஃபேக்டர் (fitment factor)என்பது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகியவற்றை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகும். ஏழாவது ஊதியக்குழுவினை பொருத்தவரை மத்திய அரசு ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57ஐ பயன்படுத்தியது.
இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம் என்பது 7000 லிருந்து 18,000 ரூபாய் என உயர்ந்தது. ஒவ்வொரு முறை புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் உயர்த்தப்படுகிறது.
அடுத்த ஊதியக்குழு 2.86 ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கினால் தற்போது இருக்கக்கூடிய அடிப்படை சம்பளமான 18 ஆயிரம் ரூபாய் என்பது 51 ஆயிரம் ரூபாயாக உயருமாம். அதேபோல ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை 9,000 ரூபாயிலிருந்து 25,740 ரூபாயாக அதிகரிக்கும். இது தவிர்த்து அகவிலைப்படி படியிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications