பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) அளவீட்டை 3 சதவீதம் அளிக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுக்கு நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும், ஓய்வூதியதாரர் பென்ஷன் தொகையிலும் பெரும் மாற்றம் ஏற்படும். மேலும் ஜூலை 1 முதல் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்திற்கும் மேலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இது தீபாவளி போனஸ் ஆக உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 47 லட்சம் ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.
கொரோனா தொற்றுக் காலம்
கொரோனா தொற்றுக் காலத்தில் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நிதி திரட்டும் பொருட்டு மத்திய அரசு தனது அரசு ஊழியர்களுக்கான பல சலுகை மற்றும் சம்பளத்தில் அளிக்கப்படும் கொடுப்பனவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
அடிப்படை சம்பளம்
ஆனால் எந்த நேரத்திலும் அடிப்படை சம்பளம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொடுப்பனவுகள் அதிகளவில் குறைக்கப்பட்டது முலம் மத்திய அரசு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
கிராக்கிப்படி 28 சதவீதமாக உயர்வு
இதற்காக மத்திய அரசு தனது ஊழியர்களைக் குணப்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கொடுப்பனவுகளை அளிக்க முடிவு செய்து ஜூலை மாதம் மத்திய அரசு 17 சதவீதத்தில் இருந்த கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) அளவீட்டை 28 சதவீதமாக உயர்த்தியது.
தடாலடி உயர்வு
இதன் மூலம் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் ஆகியவை பெரிய அளவில் அதிகரித்தது. இதோடு பல சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
31 சதவீதமாக உயர வாய்ப்பு
இந்நிலையில் தற்போது கூடுதலாகக் கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) அளவீட்டை 3 சதவீதம் அதிகரிக்க இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஆலோசனை செய்ய நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால் மத்திய அரசு ஊழியர்கள் இனி 31 சதவீதம் கிராக்கிப்படி பெறுவார்கள்.
தீபாவளி போனஸ்
இந்த 3 சதவீதம் கிராக்கிப்படி உயர்வு குறித்த முடிவு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது ஒப்புதல் பெற்ற நிலையில் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தாலும்நவம்பர் மாதம் முதல் 31 சதவீதம் கிராக்கிப்படி நடைமுறைக்கு வரும்.
இதைத் தீபாவளி போனஸ் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications