கேரளம், மகாராஷ்டிர மாநிலத்தின் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பண்டிகை சலுகையை வழங்குகிறது. ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர்களது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க முடிவு செய்துள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த 14ஆம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான ஊதியம், கூலி, ஓய்வூதியத்தையும் கேரள மாநிலத்தில் உள்ளவர்களுக்கு 25-08-2023லும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளவர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம், கூலி,ஓய்வூதியத்தை 27-09-2023லும் வழங்கப்படும்.

அந்த தேதிகளில் தங்களது தொகையை மத்திய அரசு ஊழியர்கள் வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் தங்களது சம்பளம், கூலி, ஓய்வூதியத்தை இரு மாநில ஊழியர்களும் முன்கூட்டியே பெறலாம்.
மேலும், இந்தத் தொகை அவர்களது அட்வான்ஸ் பேமெண்டாகக் கருதப்படும். சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் இது தொடர்பாக அனைத்து அலுவலகங்களிலும் நோட்டீஸ் ஒட்ட வேண்டும்.
இந்தத் தகவலை அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பளம், கூலி, ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படுவதால் பண்டிகையின் போது வீட்டுச் செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் கேரள அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 கோடி போனஸை அறிவித்துள்ளது. போனஸ் பெறுவதற்கு தகுதி இல்லாத அரசு ஊழியர்களுக்கு ரூ.2750 பண்டிகை படியாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பண்டிகை படியாக ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போனஸ் பெற்ற ஓப்பந்தப் பணியாளர்களுக்கு இந்த ஆண்டும் போனஸ் அளிக்கப்படும். கடந்த ஆண்டு தரப்பட்ட அதே விகிதத்தில் போனஸ் தொகை இருக்கும். இந்த அறிவிப்பு மூலம் 13 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கேரள நிதியமைச்சர் கேஎன் பாலகோபால் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications