டெல்லி: 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு தொகை 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது சம்பள கமிஷனானது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர இருக்கிறது. இந்த 8ஆவது சம்பள கமிஷனின் மூலம் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய இருக்கின்றனர்.
7ஆவது சம்பள கமிஷன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன்படி மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதிய தொகையாக மாதத்திற்கு 9 ,000 ரூபாயும், அதிகபட்ச ஓய்வூதிய தொகையாக மாதத்திற்கு 1.25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆண்டுதோறும் இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைக்கு அடிப்படை ஓய்வூதிய தொகையில் 53 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 10000 ரூபாய் ஓய்வூதிய தொகை வாங்கக்கூடிய நபர்கள் ,அகவிலை படியோடு சேர்த்து 15,300 ரூபாயாக வாங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலும், பண வீக்கத்தின் அடிப்படையிலும் அகவிலைப்படியானது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது 8ஆவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வுத்தொகை கணிசமாக உயரும் என சொல்லப்படுகிறது.. National Council of the Joint Consultative Machinery அளித்த பரிந்துரையான fitment factor 2.86 என்பதன் அடிப்படையில் சம்பளமும் ஓய்வூதியமும் உயர்த்தப்பட உள்ளது.
ஃபிட்மன்ட் ஃபேக்டர் (fitment factor)என்பது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகியவற்றை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகும். ஏழாவது ஊதியக்குழுவினை பொருத்தவரை ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57ஐ பயன்படுத்தியது.
ஒவ்வொரு முறை புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் உயர்த்தப்படுகிறது. 2.86 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டர் நடைமுறைக்கு வந்தால் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை 9000 ரூபாயிலிருந்து 25,740 ரூபாயாக உயரும்.
அதாவது தற்போது கிடைக்கும் ஓய்வூதியத்தை விட 186 சதவீதம் அதிகரிக்கும். அதேபோல அதிகபட்ச ஓய்வூதிய தொகை தற்போது இருக்கும் 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 3.57 லட்சம் ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது. இத்துடன் அகவிலைப் படியும் வழங்கப்படும் என்பதால் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய பலன்களை அடைய உள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications