டெல்லி: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு என என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசு யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் இந்த இரண்டு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: ஜூன் 30க்குள் எந்த திட்டத்தை தேர்வு செய்கிறோம் என்பதை ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்க கூடிய அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் எந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

என்பிஎஸ் Vs யுபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்கள் தரப்பில் முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த முடிவினை எடுத்திருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பாக என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. என்பிஎஸ் திட்டத்தில் ஊழியர்கள் தரப்பில் செய்யப்படும் பங்களிப்பு தொகை முதலீடு செய்யப்படும். அந்த முதலீடு எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ அதனைப் பொறுத்துதான் இவர்களுக்கான ஓய்வூதிய தொகை என்பது கிடைக்கும்.
யுபிஎஸ் திட்டத்தின் அம்சங்கள்: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் உத்தரவாதமான ஓய்வூதிய தொகையை அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு முதலீட்டுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதிய தொகை வேண்டுமா அல்லது உத்தரவாதமான ஓய்வூதிய தொகை வழங்கும் யூபிஎஸ் திட்டம் வேண்டுமா என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உத்தரவாதமான ஓய்வூதிய தொகை: ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர் கடந்த 12 மாதங்களில் பெற்ற அடிப்படை சம்பளத்தின் சராசரி தொகையில் 50 சதவீத தொகை உத்தரவாதமான ஓய்வூதிய தொகையாக கிடைத்துவிடும். ஆனால் என்பிஎஸ் திட்டத்தில் ஒரு குறைந்தபட்ச அல்லது உத்தரவாதமான ஓய்வூதிய தொகை என்பது கிடையாது. அந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடு அதன் மூலம் கிடைத்த மொத்த தொகை ஆகியவற்றின் அடிப்படையில் தான் அது முடிவு செய்யப்படுகிறது. மேலும் பணவீக்க அடிப்படையில் யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வூதிய தொகையை அவ்வப்போது மாற்றப்படும்.
ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்: எனவே மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் மற்றும் யுபிஎஸ் திட்டங்களின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து எந்த திட்டம் வேண்டும் என்பதை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தெரிவித்து விட வேண்டும். ஒருமுறை ஒரு ஊழியர் என்பிஎஸ் திட்டத்திலிருந்து யுபிஎஸ் திட்டத்திற்கு சென்று விட்டால் அவரால் திரும்ப என்பிஎஸ் திட்டத்திற்கு மாற முடியாது.
யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்: 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அரசு பணியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் என்பிஎஸ் திட்டத்தில் இருந்து யுபிஎஸ் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். மேலும் 2025 மார்ச் 31ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் பணி ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். புதிதாக பணிக்கு சேரக்கூடிய மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு சேர்ந்த 30 நாட்களுக்குள் எந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பதை தெரிவித்தாக வேண்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications