மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என சென்னை மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்ட பணிகளை சென்னை மெட்ரோ ரயில் கழகமான சிஎம்ஆர்எல் தான் மேற்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் சிஎம்ஆர்எல் மேலாண் இயக்குனர் சித்திக் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.

மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், மதுரை மாவட்ட ஆட்சியர் ,மாநகராட்சி ஆணையர், வருவாய் மற்றும் நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோரும் நேரில் சென்று ஆய்வில் பங்கேற்றனர். மதுரை ஒத்தக்கடை பகுதியில் முதல் கட்ட ஆய்வுப்பணி நடைபெற்றது. இதனை அடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுரையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு 26 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையும், கோயம்புத்தூரில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் நடைபெற இருக்கின்றன என கூறினார். இதற்கான முன்மொழிவு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு திட்டத்திற்கும் சேர்ந்து ஒரே முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு திட்டங்களுக்கும் தனித்தனியாக ரயில் பெட்டிகளை வாங்குவது , சிக்னல் சிஸ்டங்களை அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு தனி தனியாக அனுமதி பெறும்போது நீண்ட ஆண்டுகள் தேவைப்படும், எனவேதான் ஒரே முன்மொழிவாக தந்து அனுமதி பெற்று விடலாம் என முடிவு செய்தோம் என கூறியுள்ளார். மத்திய அரசின் பரிந்துரைக்கு ஏற்ப மெட்ரோ ரயில் திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முதலில் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான அறிக்கை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் மற்ற அமைச்சகங்களிடமும் நிதி ஆயோக் அமைப்பிடமும் அனுப்பி ஆலோசனை நடத்தினார்கள் என்றும் கூறியுள்ளார். அனுமதி கிடைத்தவுடன் மத்திய மாநில அரசுகள் ஏடிபி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி கோரும் என கூறியுள்ளார்.
இந்த நிதி கிடைத்தவுடன் பல கட்டங்களாக நிதி விடுவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதுபோல மிகப்பெரிய திட்டப் பணிகள் வரும்போது அதில் நிலம் கையகப்படுத்துவது, குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவு நீர் கட்டமைப்புகள் , மின்சார இணைப்புகளை இடமாற்றம் செய்வது ஆகியவையே மிகப்பெரிய பணியாக இருக்கும் என்றும் இதற்கே திட்டப்பணியில் 10% தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சித்திக் கூறியுள்ளார்.
சுரங்கப்பாதை அமைத்து கட்டுமான பணிகள் நடைபெற்று முடிய நான்கரை ஆண்டுகள் ஆகும் என்றும் மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் கட்டுமான பணிகளை முடிக்க மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மதுரை மெட்ரோ திட்ட பணிகளுக்காக 38.21 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் என்றும், அதில் 20.23 ஹெக்டர் நிலம் ரயில் நிலையங்கள் மற்றும் டிப்போக்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications