வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போலவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
வங்கி இல்லாத சிறிய கிராமங்களில் தபால் நிலையம் தான் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு புதிய வசதியை மத்திய அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். அது குறித்து தற்போது பார்ப்போம்.
தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு
தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலம் பாஸ் புக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தங்களது சேமிப்பு தொகை திட்டத்தை இ-பாஸ்புக் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தேவுசின் சவுகான்
இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசின் சவுகான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான புதிய வசதி குறித்து விளக்கி உள்ளார்.
இ-பாஸ்புக்
விரைவான மற்றும் வெளிப்படையான சேவையை மையமாகக்கொண்டு தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வசதியை செய்து தர வேண்டும் என மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தி உள்ளார். அதற்கேற்ப தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தற்போது இ-பாஸ்புக் வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் இந்த ட்விட்டை அக்டோபர் 12ஆம் தேதி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன்
இந்த வசதி மூலம் தற்போது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலமே தங்களது சேமிப்பு கணக்கு புத்தகத்தை பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல்
இந்த வசதியை அனைத்து தபால் நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்காக தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலும் பரிவர்த்தனையை அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் பாஸ்புக்கை பார்ப்பது எப்படி?
தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் பாஸ்புக்கை பார்க்க முதலில் தபால் அலுவலக செயலியை மொபைலில் டவுன்லோடு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் சேமிப்பு கணக்கு எண்ணை பதிவு செய்து லாகின் செய்யுங்கள். சேமிப்பு கணக்கின் டாஷ்போர்டுக்கு சென்று இருப்பு மற்றும் ஸ்டேட்மெண்டை சரிபார்க்கலாம். மினி அறிக்கை தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications