இந்தியாவில் இது முக்கியமான பண்டிகை காலம் என்பதால் நாடு முழுவதும் சர்க்கரைக்கான தேவை அதிகமாகியுள்ளது, ஆனால் சர்க்கரைக்கான உற்பத்தி பொருட்களில் பெரும் பகுதி எத்தனால் உற்பத்திக்கு செல்லும் காரணத்தால் சர்க்கரை உற்பத்தி குறைந்து, சப்ளை டிமாண்ட் பிரச்சனை உருவாகி தற்போது விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின்பு வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இறக்குமதி மூலம் உடனடியாக விலை குறைப்பது மட்டும் அல்லாமல் சர்க்கரை உற்பத்தியை மேம்படுத்த போதுமான கால நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும், இதேவேளையில் மக்களுக்கு தேவையான சர்க்கரையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு முன்கூட்டியே எல் நினோ பிரச்சனையை உணர்ந்து அனைத்து விதமான சர்க்கரைக்கும் மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30, 2026 வரையில் ஏற்றுமதி தடையை விதித்ததுள்ளது.
ஆனால் சந்தையின் தேவைக்கு போதுமான இருப்பு உருவாக்கப்படாத காரணத்தால் தற்போது இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. 1 மல்லியன் டன் அளவிலான இறக்குமதி அக்டோபர் வரையில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த 2 மாத இடைவெளியில் உள்ளூர் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை அதிகரித்து சப்ளை பிரச்சனையை தீபாவளிக்குள் சீராகும்.
மத்திய அரசின் இறக்குமதி அறிவிப்பால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சர்க்கரை நிறுவனங்களின் பங்கு மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 5 சதவீதம் வரையில் குறைந்து பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
இதில் முக்கியமாக டால்மிய பாரத் சுகர் நிறுவன பங்குகள் சுமாக் 5.47 சதவீதம் வரையில் சரிந்து 480.30 ரூபாய்க்கு சரிந்தது. இதேபோல் துவாரகேஷ் சுகர் 4.32 சதவீதமும், பல்ராம்பூர் சீனி மில்ஸ் 4.15 சதவீதமும், திருவேனி இன்ஜினியரிங் 3.82 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, சென்னையை சேர்ந்த EID பேரி பங்கு விலை 2.22 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்த வார துவக்கத்தில் சர்க்கரை விலை உயர்ந்துள்ள காரணத்தால் பெரும்பாலான சர்க்கரை நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்திருந்த நிலையில் தற்போது தலைகீழாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications