இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த வாரம் பெருமளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக எழுந்த புகாரையடுத்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் கர்நாடக தொழிலாளர் துறைக்கு விரைவாக நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு உத்தரவிட்டது. கடந்த வாரம் நாட்டின் முன்னணி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், மைசூர் வளாகத்தில் பல மாதங்களாக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட பிரஷர்களை பணி நீக்கம் செய்ததாக ஒப்புக்கொண்டது.
ஆனால் உண்மையாகவே 700 பேருக்கும் அதிகமாக பிரஷர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஐடி மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்களுக்கான அமைப்பான நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாயீஸ் செனட் (NITES) தெரிவித்துள்ளது. பின்னர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு இன்ஃபோசிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரப்பூர்வ புகாரை அனுப்பியது.

NITES தனது புகாரியில் இன்போசிஸ் லிமிடெட் சமீபத்தில் வலுகட்டாயமாக பணிநீக்கம் செய்தது. ஏற்கனவே 2 ஆண்டுகள் தாமதமாகத் தான் பணிநீக்கம் செய்யப்பட்ட பிரஷர்களுக்கு ஆஃபர் லெட்டர்களும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தது.
அதோடு NITES தனது புகாரில் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்தவும், இது போன்ற பணி நீக்கங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த இன்ஃபோசிஸ்-க்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கவும், பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், தொழிலாளர் சட்டங்களின் விதிகளை மீறியதற்கு நிறுவனத்திற்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கவும் கோரியது. இதையடுத்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தொழில் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு பெங்களூரு மற்றும் மைசூர் வளாகங்களுக்கு நேரில் சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து இன்போசிஸ் நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு கருத்தும் வெளியாகவில்லை. கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனம் யாரையும் வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்யவில்லை என்றும் கூறியிருந்தது. அதோடு இந்நிறுவனம் கடுமையான பணியமர்த்தல் செயல்முறையை கொண்டுள்ளது என்றும், பயிற்சிக்குப் பின்பு பிரஷர்கள் மூன்று மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.
ஒருவேளை இந்த டெஸ்டுகளில் பிரஷர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் அவர்கள் நிறுவனத்தில் தொடர முடியாது என்றும் தெரிவித்தது. இதே செயல்முறை தான் 20 ஆண்டுக்கு மேலாக இருந்து வருவதாகவும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் சமீபத்திய பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் ஊழியர் நிறுவனம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை பணி நீக்கம் செய்வது இதுவே முதல்முறை என்றும் எதிர் காலத்தில் இது தொடரக்கூடும் என்றும் தனது விரக்தியை தெரிவித்தார்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications