மத்திய அரசு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு மிக முக்கியமான புதிய விதிகளை அறிவித்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது ஆடியோக்களை (டீப் ஃபேக்) அரசு அல்லது நீதிமன்றம் கண்டறிந்து தடை செய்ய உத்தரவிட்டால் அவற்றை 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. முன்பு வீடியோவை டெலிட் செய்வதற்கான காலம் 36 மணி நேரம் அவகாசம் இருந்தது. இப்போது நேரம் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
டீப் ஃபேக் என்றால் என்ன? AI தொழில்நுட்பம் மூலம் ஒருவரின் முகம் அல்லது குரலை நகலெடுத்து போலியாக உருவாக்கும் வீடியோ அல்லது ஆடியோ. இது மிக உண்மையாகத் தோன்றும். இதை தவறாகப் பயன்படுத்தி மோசடி, பிளாக்மெயில், தேர்தல் நேரத்தில் போலி தகவல்கள் பரப்புதல், பெண்களை துன்புறுத்துதல் போன்றவை அதிகரித்து வருகின்றன. 2023-இல் ரஷ்மிகா மந்தன்னா நடிகையின் போலி வீடியோ வைரலானது இதற்கு பெரும் உதாரணம்.

அரசின் புதிய விதிகளின்படி, AI மூலம் உருவாக்கப்பட்ட எந்த கன்டென்ட் ஆக இருந்தாலும் சரி, சமூக வலைத்தள நிறுவனங்கள் அதை மக்களுக்கு தெளிவாக "AI மூலம் உருவாக்கப்பட்டது" என்று லேபிள் மூலம் குறிப்பிடப்பட வேண்டும். இந்த லேபிளை மறைக்கவோ அகற்றவோ பயனர்களுக்கு அனுமதிக்கக்கூடாது. இதனால் பயனர்கள் உண்மையானதா அல்லது போலியானதா என எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
அரசு அல்லது நீதிமன்றம் போலி AI கன்டென்ட்-ஐ அகற்ற உத்தரவிட்டால், சமூக ஊடக நிறுவனங்கள் 3 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும். AI மூலம் உருவாக்கப்பட்ட போலி கண்டென்ட்-ஐ சட்டவிரோத உள்ளடக்கத்தைப் போலவே கருதப்படும்.
மேலும் மோசடி, போலி ஆவணங்கள், பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் துன்புறுத்தல், ஆள் மாறாட்டம், ஆயுதங்கள் அல்லது சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய AI உள்ளடக்கத்தை தானாகவே தடுக்கும் தொழில்நுட்பத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த விதிகள் சாதாரண புகைப்படம் அல்லது வீடியோ எடிட்டிங், கல்வி அல்லது டிசைன் பணிகள், சப்டைட்டில் போன்க மேம்பாட்டு பணிகள், நல்ல நோக்கத்துடன் செய்யப்படும் கலைப்பணிகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது. எனவே தினசரி பயன்பாட்டு எடிட்டிங் பாதுகாப்பாக இருக்கும்.
இப்புதிய விதிகள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "டீப் ஃபேக் மூலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சமுக வலைத்தளத்தில் பரவும் வீடியோ கன்டென்ட் உண்மையானதா அல்லது AI உருவாக்கப்பட்டதா என்பதை தெரிந்தால், பயனர்கள் தாங்களாகவே முடிவெடுக்க முடியும். இதுவே எங்கள் நோக்கம் - வீடியோக்களை தணிக்கை செய்வது அல்ல, வெளிப்படைத்தன்மை மேம்படுத்தும் முயற்சியாக இப்புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது" என்றார்.
இந்த புதிய விதிகள் பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வருகின்றன. இதனால் சமூக ஊடக நிறுவனங்கள் விரைவாக செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. டீப் ஃபேக் போன்றவை சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய படியாக அமையும். பொதுமக்கள் AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டிய நேரம் இது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications