பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய திருத்தங்களின் படி, எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆக 24% அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது தினசரி கொடுப்பனவு(Allowance) ரூ.2,000 இலிருந்து ரூ.2,500 ஆக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளில் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத சம்பளம் 24% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்களுக்கு ஒரு வருடத்திற்கான கூடுதல் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களின் மாத ஓய்வூதியம் ரூ31,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், எம்.பி.க்கள், நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு ரூ.2,000 இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2018ல் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவுகளை விலை ஏற்றத்துடன் (inflation-linked) இணைத்து உயர்த்தும் புதிய முறைமையை முன்மொழிந்ததன் பிறகு, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் சம்பளம் அதிகரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த புதிய சம்பள உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிடப்படுகிறது.
1961ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவுத்திறன் பணவீக்கக் குறியீட்டை (Cost Inflation Index) அடிப்படையாகக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018 க்குப் பிறகு இது முதல் சம்பள உயர்வு என்றாலும், இந்தியா 2020ல் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிய போது, அனைத்து எம்.பி.க்களும் தானாக முன்வந்து தங்கள் சம்பளத்தை ரூ.30,000 (30%) குறைத்திருந்தனர். அதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பளக் குறைவால் சேமிக்கப்பட்ட நிதி கோவிட் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு, ஒரு பாராளுமன்ற குழு எம்.பி.க்களின் சம்பளத்திலும் தினசரி கொடுப்பனவிலும் 100% உயர்வு மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தில் 75% அதிகரிப்பு செய்ய பரிந்துரை செய்தது. மேலும் அவர்களது துணையாளர் (companions) என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தி, முன்னதாக வழங்கப்பட்ட தம்பதியினர்(spouses) சிறப்புவசதிகளுக்கு பதிலாக புதிய சேவைகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
அந்த குழுவை அந்த கால கோரக்க்பூர் எம்.பி.யான யோகி ஆதித்யநாத் தலைமை வகித்தார். அவர்கள் எம்.பி.க்களின் மாத சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்தவும், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ₹20,000 இலிருந்து ₹35,000 ஆக அதிகரிக்கவும் பரிந்துரை செய்தனர். மேலும், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவை ₹2,000 இலிருந்து ₹4,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
மேலும், விலையேற்றம் மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று ஒரு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகப்பெரிய மற்றும் மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளை நிர்வகித்தாலும், பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான ஊதியம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இருப்பினும், 2012ஆம் ஆண்டு Inter-Parliamentary Union அறிக்கையின்படி, பர்சேசிங் பவர் பாரிட்டி (PPP) அடிப்படையில், இந்திய எம்.பி.க்கள் பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications