அரசின் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டு அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அந்த அறிவிப்பில் மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 1.1% வரை குறைத்து அறிவித்தது.
சேமிப்புகளுக்கு வட்டி குறைப்பு
இது சிறுசேமிப்பாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் புதிய அறிவிப்பின் படி, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.4% குறைக்கப்பட்டு 6.4% ஆகவுன்ம், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி விகிதம் 0.9% குறைக்கப்பட்டு, 5.9% ஆகவும் குறைக்கப்பட்டது. இதே மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.9% குறைக்கப்பட்டு 6.5% ஆகவும் குறைக்கப்பட்டது.
வைப்பு தொகைக்கும் வட்டி குறைப்பு
அதோடு முதன் முறையாக சேமிப்பு வைப்பு தொகைக்கான வட்டி விகிதமானது 4%ல் இருந்து 0.5% குறைக்கப்பட்டது. இதே ஒரு வருடத்திற்காக வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் 1.1% குறைக்கப்பட்டது. இந்த குறைப்பினால் 5.5% ஆக இருந்த வட்டி விகிதமானது 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே இரண்டு ஆண்டிற்கான வைப்பு தொகை வட்டி விகிதமானது 0.5%மும், இதே மூன்று ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் 0.4%மும், 5 ஆண்டிற்கான வட்டி விகிதத்தில் 0.9%ம் குறைக்கப்பட்டது.
வட்டி குறைப்பு வாபஸ்
இதே பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டு விகிதமும் 0.7% குறைக்கப்பட்டு 6.9% ஆகவும் குறைக்கப்பட்டது. இந்த வட்டி குறைப்பு விகிதமானது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. எனினும் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சிறு சேமிப்புகளுகான வட்டி குறைப்பு செய்த அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அதோடு ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் அப்படியே தொடரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எந்த திட்டத்திற்கு வட்டி எவ்வளவு?
சேமிப்பு டெபாசிட்களுக்கு - 4%
சுகன்யா சம்ரிதி யோஜனா - 7.6%
பொது வருங்கால வைப்பு - 7.1%
தேசிய சேமிப்பு பத்திரம் - 6.6%
கிசான் விகாஸ் பத்திரம் - 6.6%
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 7.6%
1 - 3 ஆண்டு டைம் டெபாசிட்டுக்கு - 5.5%
5 ஆண்டு டெபாசிட்டுக்கு - 6.7%
ஐந்தாண்டு தொடர்ச்சியான வைப்பு நிதிக்கு - 5.8% ஆகவும், முந்தைய வட்டி விகிதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications