மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அணிந்துள்ள வாட்ச் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் இந்த புதிய ஆடம்பர வாட்ச் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில் காணப்பட்டது. அதன்படி, இது உலகின் மிகவும் மெல்லிய வாட்ச் ஆகும். இதன் விலையும் சுமார் 5 கோடி ரூபாயாகும்.
வெளியான அறிக்கையின்படி , ஜுக்கர்பெர்க் இத்தாலிய ஆடம்பர தயாரிப்பு நிறுவனமான பல்கேரியின் உலகின் மெல்லிய மெக்கானிக்கல் வாட்ச் ஆக்டோ ஃபினிசிமோ அல்ட்ரா வாட்ச் ஆனது எஸ்ஓஎஸ்சி சான்றிதழை கொண்டுள்ளது. SOSC என்பது சுவிஸ் அதிகாரப்பூர்வ க்ரோனோமீட்டர் சோதனை நிறுவனம். இது ஒரு வாட்ச்களுக்கான ஆய்வகம் ஆகும். இதில் உற்பத்தியாளரின் சோதனைகளில் தேர்ச்சி பெற்ற கடிகாரங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழாகும். சான்றிதழைப் பெறும் கைக்கடிகாரங்கள் "க்ரோனோமீட்டர்" லேபிளுடன் பொறிக்கப்பட்டுள்ளன மற்றும் தனித்துவமான வரிசை எண்ணுடன் வெளிவரும்.

ஆக்டோ ஃபினிசிமோ அல்ட்ரா வாட்ச் SOSC என்பது இத்தாலிய பிராண்டான பல்கேரியின் ஆடம்பர கடிகாரமாகும். இது சமீபத்தில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அணிந்திருந்தார். இந்த கடிகாரம் உலகின் மிக மெல்லிய இயந்திர கடிகாரமாக கருதப்படுகிறது. இதன் அளவு 1.7 மிமீ தடிமன் மட்டுமே உள்ளது. அதாவது மொத்தமாக இரண்டு அடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் அகலம் மட்டுமே கொண்டிருக்கும்.
அதேபோல், இந்த வாட்ச்-ன் குறைவான யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாட்ச் தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட கேஸுடன் வருகிறது. ஆக்டோ ஃபினிசிமோ அல்ட்ரா வாட்ச் ஆனது 170 தனிப்பட்ட கூறுகளை சேமித்து வைக்க அதன் மிக மெல்லிய கேஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன் வடிவமைப்பு மெயின் பிளேட் டங்ஸ்டன் கார்பைடு மற்றும் டைட்டானியம் காப்பு, லக்ஸ் மற்றும் பேசல்ஸுடன் வருகிறது.
கடிகாரத்திற்கு COSC சுவிஸ் அதிகாரப்பூர்வ க்ரோனோமீட்டர் சோதனை நிறுவனம் சான்றிதழ் உள்ளது. ஆடம்பரப் பொருளின் விலை $590,000 அதாவது ரூ.5 கோடி ஆகும். இதேபோல், கடந்த மாதம் ஜுக்கர்பெர்க், De Bethune DB25 Starry Varius Aérolite என்ற மற்றொரு உயர்தர கடிகாரத்தை அணிந்திருந்தார். அதன் விலை சுமார் $260,000 அதாவது ரூ.2.20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வாட்ச் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லாவின் சிஇஒ எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ், லாரி எலிசன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் 214.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications