உலகளவில் நிறுவனங்களில் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்திற்கும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சம்பளத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாக ஆக்ஸ்பாம் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஊழியர்களின் சம்பளத்தில் சமத்துவமின்மை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கையின் விவரங்களின்படி இந்தியாவில் பணிபுரியும் CEO-க்கள் சராசரி ஊதியமாக ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் வரை பெறுகின்றனர். 2019-ஆம் ஆண்டு முதல் CEO-க்களின் சம்பளம் பணவீக்கத்திற்கு ஏற்ப 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு நேற்மாறாக கடந்த 6 ஆண்டுகளில் தொழிலாளர்களின் ஊதியம் வெறும் 0.9 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆக்ஸ்பாம் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் அதிர்ச்சியளிக்கும் சில உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது கோடீஸ்வரர்களின் 1 மணி நேர சம்பளம் பெரும்பாலான தொழிலாளர்கள் 1 வருடத்தில் சம்பாதிப்பதை விட அதிகமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. அயர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள CEO-க்கள் 4.7 மில்லியன் முதல் 6.7 மில்லியன் டாலர் வரையில் வருமானம் பெறுகின்றனர். இந்த இரு நாடுகள் தான் அதிக சிஇஓ சம்பளம் வழங்கிய பட்டியலில் முன்னணியில் உள்ளன.
2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் பணவீக்கத்திற்கு ஏதுவாக 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்பதும் தெரிய வருகிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள CEO-க்கள் 2024-ஆம் ஆண்டில் சராசரியாக 1.6 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளனர். ஆனால் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மிகக் குறைவாக 0.6 சதவீத ஊதிய வளர்ச்சி மட்டுமே பெற்றுள்ளனர்.
ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் அமிதாப் பெஹார் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கை வெளியாகும் போது ஒரே மாதிரியான விஷயம் தான் தெரிய வருகிறது. சிஇஓ-க்களின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் ஊதியம் சிறிதளவு கூட உயரவில்லை. வேலைவாய்ப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை இது தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. செல்வம் தொடர்ந்து செல்வந்தர்களிடமே போய் சேருகிறது. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான உழைக்கும் வர்க்கத்தினர் வாடகை, உணவு மற்றும் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்", என்று கவலை தெரிவித்துள்ளார்.
அதேபோல ஆண், பெண் ஊழியர்களின் ஊதிய இடைவெளி சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 82 நாடுகளில் உள்ள 11,366 நிறுவனங்களில் 2022-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆண் பெண் சம்பள இடைவெளி 27 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனாலும் சில நிறுவனங்களில் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் ஊதியம் இல்லாமல் திறம்பட பணிபுரிவதாகவும், அதே நேரத்தில் அவர்களுடன் பணி புரியும் ஆண்கள் முழு வாரத்திற்கும் ஊதியம் பெறுவதாகவும் ஆய்வு கூறுகிறது.
கடந்த ஆண்டில், பெரிய நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் கோடீஸ்வரர்கள் 206 பில்லியன் டாலர் செல்வத்தை சேர்த்துள்ளனர். அப்படியானால் ஒரு மணி நேரத்திற்கு 23,500 டாலர்கள். இது உலகளாவிய ஊழியர்கள் பெரும் சராசரி ஆண்டு வருமானமான 21,000 டாலர்களை விட அதிகமாகும்.
ஊதியத்தில் சமத்துவமின்மை இருப்பதால் இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இன்னும் வெளிப்படையான ஊதிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

நடுத்தர குடும்பங்களுக்கு விடிவுகாலம்.. Joint Tax Filing முறை.. மத்திய அரசு முடிவு என்ன..?!

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications