மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பை அமல்படுத்திய பிறகும் பல பொருட்களின் மீது செஸ், சர்சார்ஜ் என ஆகியவற்றின் மூலம் அதிகளவிலான வரியை வசூலித்து வருகிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் கூட அக்ரி இன்பரா செஸ் என்ற புதிய வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் வரி வருமானத்தில் செஸ், சர்சார்ஜ்-ன் ஆதிக்கம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

2011-12 நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வரி வசூல் அளவீட்டில் செஸ் மற்றும் சர்சார்ஜ் வாயிலான வருமானம் வெறும் 10.4 சதவீதம் மட்டுமே, ஆனால் தற்போது 2020-21ஆம் நிதியாண்டில் இதன் அளவீடு 19.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் செஸ் மற்றும் சர்சார்ஜ் வாயிலான வருமான வரி வசூல் அளவீடு சுமார் 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பைனான்ஸ் கமிஷன் கட்டமைப்பில் செஸ் மற்றும் சர்சார்ஜ் ஆகியவற்றை மத்திய அரசு தான் வசூல் செய்கிறது. இதில் மாநில அரசுக்கான உரிமை எதுவும் இல்லை. இந்தக் கட்டமைப்பின் மூலம் வரி வசூலில் மாநில அரசுக்கான உரிமை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதன் மூலம் 15வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி பகிர்மான அளவீட்டை அதிகரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications