இன்றைய வர்த்தக உலகில் எதெல்லாம் Decentralized ஆக உள்ளதோ அதை ஒரு பிராண்டின் கீழ் கொண்டு வந்து விற்பனை செய்தாலே போது, கட்டாயம் பெரிய வருமானத்தை பார்க்க முடியும்.
இன்று முன்னணி பிராண்டாக நீங்கள் பார்க்கும் அனைத்தும் இப்படியானவை தான் உதாரணமாக மளிகை கடைகள் இந்தியா முழுவதும் இயங்கும் டிபார்ட்மென்ட்னல் ஸ்டோராக மாறியது, முடிதிருத்தும் கடைகள் அனைத்தும் தற்போது பிராண்டெட் செயின் சலூன் கடைகளாக மாறியது, சின்ன ஹோட்டல்கள் எல்லாம் காணாமல் போய் பெரிய பிராண்டின் கீழ் கிளவுட் கிட்சன், கிசோக் ஆக மாறி வருகிறது. இந்த வகையில் தற்போது டீ கடையும் இதில் இணைந்துள்ளது.

டீ இந்திய மக்களின் அத்தியாவசியமான ஒன்று, மக்கள் நேரம் காலம் பார்க்காமல் குடிக்கும் ஒன்று டீ. பொதுவாக டீ கடைகள் அதிகப்படியான லாபத்தில் இயங்கும் என்பது அனைவருக்கும் தெரியும், இதையே ஒரு பிராண்டாக மாற்றி இந்தியா முழுவதும் உருவாக்கினால் லாபத்தை அள்ள முடியும். இதுதான் இந்தியாவில் தற்போது டிரெண்ட்.
இந்த பிஸ்னஸ் மாடலை உணர்ந்த அனுபவ் துபே தனது நண்பர் ஆனந்த் நாயக் உடன் இணைந்து உருவாக்கிய ஒரு டீ கடை தற்போது இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருடம் 150 கோடி ரூபாய் தொகையை வருமானமாக பெற்று வருகின்றனர். டீ கடையில் 150 கோடி ரூபாயா என்று உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் ஆனால் இது சாத்தியம் என்பதை பல நிறுவனங்கள் காட்டியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா என்னும் பகுதியை சேர்ந்த அனுபவ் துபே ஒரு வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை அனுபவ் துபே-ஐ பிஸ்னஸ் பக்கம் வரவேண்டும் என கூறிவிட்டு அவரை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்க விரும்பினார். UPSC தேர்வுகளுக்குத் தயாராவதற்கு அவரது தந்தை அனுபவ் துபே-வை டெல்லிக்கு அனுப்பினார்.

ஆரம்பம் முதல் UPSC தேர்வுகளை விரும்பாத அவர் இதற்கு தான் சரிப்பட்டு வரமாட்டோம் என்பதை உணர்ந்தார். இதனால் அனுபவ் துபே UPSC தேர்வுகளுக்கான பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறினார். இதோடு நிற்காமல் சொந்தமாக சொழில் துவங்க முடிவு செய்தார் அனுபவ் துபே.
அனுபவ் தனது நண்பர் ஆனந்த் உடன் சேர்ந்து சுமார் 3 லட்ச ரூபாய் தொகையை சிறிய முதலீட்டில் டீ வியாபாரத்தை தொடங்கினார். முதலீட்டு தொகை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் அவர்களால் மார்க்கெட்டிங், இன்டீரியர் டிசைன் மற்றும் பிராண்டிங் ஆகியவற்றுக்கு போதிய பணத்தை ஒதுக்க முடியவில்லை.
இதனால் இந்தூர் பகுதியில் ஒரு சிறிய டீ கடையை பெண்கள் விடுதிக்கு எதிரில் திறந்தனர். இந்த கடைக்கு Chai Sutta Bar என்ற பெயரை வைத்த அவர்கள் முதலீட்டை கடன் வாங்கி திரட்டிய நிலையில் Chai Sutta Bar பெயரை கையால் எழுதப்பட்ட மரப்பலகை விளம்பர பலகையாக வைத்து துவங்கினர்.
இன்று, அனுபவ் மற்றும் ஆனந்த் இந்தியாவில் 195 நகரங்களில் 400க்கும் மேற்பட்ட Chai Sutta Bar விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளனர். துபாய், இங்கிலாந்து, கனடா மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலும் விற்பனை நிலையங்கள் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் பெரிய பிராண்ட் கடையாக மாறியுள்ளனர். சாய் சுட்டா பார் தற்போது ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.


Click it and Unblock the Notifications