இந்தியாவின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை பெரு நகரங்களோடு இணைக்க வேண்டும், பொது மக்களுக்கான விமான பயணத்தை எளிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு உதான் திட்டத்தை கொண்டு வந்தது.
உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என அர்த்தம். நாட்டின் சிறு நகரங்களிலும் விமான சேவையை எளிதாக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் உதான் திட்டத்தின் கீழ் பல இடங்களில் விமான நிலையங்களை அமைத்தது. சில நகரங்களில் இருந்த விமான ஓடு பாதைகளை மாற்றி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 2014ஆம் ஆண்டு நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ஆக இருந்து தற்போது 160ஆக உயர்ந்துள்ளது.

உதான் திட்டமே நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. ஆனால் உதான் திட்டத்தில் கட்டப்பட்ட அனைத்து விமான நிலையங்களுமே இப்போது பயன்பாட்டில் இருக்கின்றனவா என பார்த்தால் , உண்மை வேறாக இருக்கிறது. மத்திய அரசின் புள்ளி விவரங்களே இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
உதான் திட்டத்தின் கீழ் கட்டபட்ட விமான நிலையங்களில் 15 விமான நிலையங்கள் செயல்படாமல் இருக்கின்றன. அதாவது temporarily non operational என்ற பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. அப்படி என்றால் இங்கே எந்த விமான போக்குவரத்தும் இல்லை. விமானங்கள் வந்து செல்லவில்லை என்றாலும் விமான நிலையங்களை பராமரித்து தானே ஆக வேண்டும். இதற்கு மட்டும் அரசு 900 கோடி ரூபாயை செலவு செய்கிறது.
விமானங்களே வந்து செல்லாத உதான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 15 பிராந்திய விமான நிலையங்களை பராமரிப்பதற்காக மட்டும் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் செலவு செய்கிறது அரசு. தொடக்கத்தில் பெரிய வரவேற்பு இருந்து தற்போது இந்த விமான நிலையங்கள் செயல்படாமல் இருக்க பல காரணங்கள் உள்ளன. இங்கே மக்கள் வருகையை அதிகரிக்கவும் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கவும் ஏதுவாக அரசு 3 ஆண்டு காலங்களுக்கு மானியம் வழங்கியது. அந்த மானியம் நின்ற உடன் டிக்கெட் விலை உயர்ந்ததால் மக்கள் மாற்று போக்குவரத்தை தேடி சென்று விட்டனர்.
சிறு நகரங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு பட்ஜெட் ஏர்லைன்கள் முக்கியம். ஆனால் இந்தியாவில் பட்ஜெட் விமான நிறுவனங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அப்படியே நிறுவனங்கள் வந்தாலும் இதில் பெரிய வளர்ச்சி ஏதும் இல்லாமல் தொழிலையே நிறுத்திவிடுகின்றன. இது பெரிய சவால்.

வட இந்திய மாநிலங்கள், மலை பாங்கான பகுதிகளில் எல்லாம் விமானங்களை இயக்குவது பெரிய சிக்கலாக உள்ளது. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் என சிக்கல்கள் இருந்தாலும் பனி காலங்களில் விமானம் இயக்குவதே சவால் தான். அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த பிராந்தியங்களில் விமான சேவைக்கு பனி மற்றும் குளிர் பிரச்சினையாக உள்ளது.
அடுத்தாக பயணிகள் எண்ணிகை குறைவு. சாதாரண ஆட்டோ கூட முழுமையாக ஆட்கள் ஏறினால் தான் எடுப்பார்கள். விமான நிறுவனங்களுக்கு ஒரு கணிசமான எண்ணிக்கையில் பயணிகள் வந்தால் தானே விமானம் இயக்குவதில் குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். பிராந்திய மக்கள் அதிக டிக்கெட் கட்டணம் இருந்தால் மாற்று போக்குவரத்தை நாடி சென்றுவிடுவார்கள்.
இதன் காரணமாக 15 விமான நிலையங்கள் செயல்படாத நிலையில் உள்ளன. ஆனால் அவற்றை பராமரிக்கவே பல கோடி செலவிட வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. மானியம் அடிப்படையிலான திட்டங்கள் விமான போக்குவரத்து துறையில் செட் ஆகவில்லை என கூறுகிறார் விமான கன்சல்டன்சி நிறுவனமான மார்ட்டின் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர் மார்க் டி மார்ட்டின். இரண்டாம் , மூன்றாம் நிலை நகர மக்களை பொருத்தவரை டிக்கெட் கட்டணத்தை முக்கியமாக பார்ப்பார்கள் மானிய விலையிலான டிக்கெட் இல்லையென்றால் அவர்கள் விமான போக்குவரத்தை நாட மாட்டார்கள் என தெரிவிக்கிறார்.
2024ஆம் ஆண்டில் மட்டும் அரசு உதான் திட்டத்தில் திறந்த 7 விமான நிலையங்கள் தற்போது செயல்படாமல் உள்ளன. அதில் 5 விமான நிலையங்கள் உத்திரபிரதேசத்தில் இருக்கின்றன. மத்திய அரசு இதுவரை உதான் திட்டத்திற்கு 4638 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. சிறு நகரங்களில் மட்டும் இந்த திட்டத்தில் 93 விமான நிலையங்கள் கட்டப்பட்டு 78 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு சிம்லாவில் தான் முதல் ஏர்போர்ட் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் தற்போது அது செயல்படவில்லை .இதனை பராமரிக்கவே அரசு 116 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது.
ஒரு விமான நிலையம் எந்த இடத்தில் அமைகிறது என்பதை பொறுத்து தான் அதன் வெற்றி இருக்கிறது என்கிறார் மார்டின். மலை பகுதிகள், மூன்றாம் நிலை நகரங்களில் லாபத்திற்காக விமான இயங்குவது கடினம் என்கிறார். சென்னை, டெல்லி போன்ற பெரு நகரத்திற்கு அருகே இருக்கும் ஊரில் விமான நிலையம் அமைந்தால் அதற்கு வரவேற்பு இருக்கும் என்கிறார்.
அரசு உதான் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் அரசு செயல்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயல்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை செயல்பட வைப்பது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்கிறார் மார்ட்டின். அதாவது பட்ஜெட் விலை விமான நிறுவனங்கள் பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் சலுகைகள் வழங்குவது, மக்களிடம் இன்னும் இந்த திட்டத்தை எளிமையாக கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினால் நிலைமை மாறும் என்கிறார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications