தூசி தட்டியவருக்கு துட்டு மழை! ரூ.10-க்கு வாங்கிய RIL பங்கு! இன்று அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சில நேரங்களில் நாம் எப்போதோ தொலைத்த பொருள் வீட்டை சுத்தம் செய்யும் போது நம் கையில் கிடைக்கும். அப்படித்தான் ஒருவருக்கு தனது வீட்டை சுத்தம் செய்யும் போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லான் என்ற நபர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இவருக்கு பங்குச்சந்தை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. இந்நிலையில் 1988-ஆம் ஆண்டு அவருடைய உறவினர் யாரோ வெறும் 10 ரூபாய்க்கு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் பங்கை வாங்கி வைத்துள்ளார்.

அந்தப் பங்கை வாங்கி வைத்தவர் மறைந்த பிறகு வீட்டிலேயே ஆவணம் மட்டும் வீட்டிலேயே இருந்துள்ளது. அவற்றை கொண்டு என்ன செய்வது என்பதே ரத்தனுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த பங்கு தொடர்பான ஆவணம் அவர் கையில் கிடைத்துள்ளது. இதை வைத்து என்ன செய்வது என்று விழித்த ரத்தன், உடனடியாக தனது எக்ஸ் பதிவில் ஆவணத்தை பதிவிட்டு பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்தவர்களின் வழிகாட்டுதலை கேட்டுள்ளார்.

தூசி தட்டியவருக்கு துட்டு மழை! ரூ.10-க்கு வாங்கிய RIL பங்கு! இன்று அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரத்தன் தனது X பதிவில், "இந்த ஆவணம் எங்கள் வீட்டில் இருந்து கிடைத்தது. எனக்கு பங்குச்சந்தையைப் பற்றி எதுவுமே தெரியாது. இந்தப் பங்குகள் இன்னும் எங்களுக்கு சொந்தமானதுதானா? யாராவது எனக்கு வழிகாட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார். மார்ச் 11-ஆம் தேதி காலை 9 மணி அளவில் ரத்தன் இந்த போஸ்டை பதிவு செய்தார். அதிலிருந்து சற்று நேரத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான வீயுஸ்-களை இந்தப் பதிவு பெற்றது.

ரத்தன் தில்லான் தனது வீட்டில் கிடைத்த பழைய ரிலையன்ஸ் நிறுவன பங்கு ஆவணங்களின் புகைப்படத்தை X-இல் பதிவிட்டதும் போதும்.. அந்தப் பதிவிற்கு கமெண்ட்ஸ்கள் குவியத் தொடங்கியது. கமெண்ட் செக்சன் முழுவதுமாக நகைச்சுவை களமாக மாறியது.

அதில் ஒரு பயனர் ஸ்டாக் ஸ்பிளிட் மற்றும் போனஸ் பங்குகள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பார்த்தால் இன்று இந்தப் பங்கின் 960-ஆக இருக்க வேண்டும். அப்படியானால் இதற்கு நீங்கள் தோராயமாக 11.88 பெற முடியும் என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர் உங்களை அழைத்து வருவதற்கு லம்போர்கினியை அனுப்புகிறேன் என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பயனர் ரத்தன் பாய் வீட்டை இன்னும் நன்றாக தேடிப் பாருங்கள். வேறு ஏதேனும் வேறு ஏதேனும் எம்ஆர்எப் பங்குகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர் நீங்கள் இந்த பங்கு ஆவணத்தை மெயில் அனுப்ப வேண்டும். நிறுவனம் இந்த பங்குகளை உங்கள் டீமேட்-ல் வரவு வைப்பதற்கான செயல்முறையை தொடங்குவார்கள். ஒரு வேளை சரிபார்ப்பு தேவைப்பட்டால் நீங்கள் இந்த ஆவணத்தை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . பின்னர் மொத்த பங்குகளையும் டிமேட்டில் வரவு வைப்பார்கள் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ளலாம். அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதே நேரம் பங்குச்சந்தையில்.. நீண்ட கால முதலீட்டின் பலன் என்ன? என்பதும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+