பட்ஜெட்-க்கு முன் சந்திரபாபு நாயுடு திடீர் டெல்லி பயணம்.. அமித் ஷா உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜூலை 23 ஆம் தேதி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசர அவசரமாக டெல்லிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

TDP கட்சியின் கூட்டணியில் அமைந்துள்ள மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட்-டில் ஆந்திராவுக்கு ஆதரவாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று ஏற்கனவே கருந்து நிலவியது. இதற்கு ஏற்றார் போல் கடந்த வாரம் ரூ.60,000 கோடி முதலீட்டில் ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் மையத்தை அமைக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார் சந்திரபாபு நாயடு, இதை தொடர்ந்து ஆய்வு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டன.

பட்ஜெட்-க்கு முன் சந்திரபாபு நாயுடு திடீர் டெல்லி பயணம்.. அமித் ஷா உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!


இதை தொடர்ந்து தற்போது, பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பு சந்திரபாபு நாயடு-வின் திடீர் டெல்லி பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. சந்திரபாபு நாயடு இரண்டு நாள் டெல்லி பயணத்தில் முதல் கட்டமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்தார்.

இதை தொடர்ந்து மற்ற மத்திய அமைச்சர்களை புதன்கிழமை (இன்று) சந்திரபாபு நாயடு சந்திக்க உள்ளார். அமித் ஷா உடனான சந்திப்பில், சந்திரபாபு நாயடு தனது மாநிலத்தின் நிதி நிலை குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை ஆந்திர பிரதேச மாநிலம் தனது நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாக சந்திரபாபு நாயடு அமித் ஷாவிடம் தெரிவித்தார். கடந்த மாதம் சந்திரபாபு நாயடு அரசு பதவியேற்றதிலிருந்து நான்காவது முறையாக வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது.

சந்திரபாபு நாயடு தனது எக்ஸ் பதிவில், தனது டெல்லி பயணம் குறித்து பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நிலவிய நிதியியல் பேரழிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கு தெரிவித்தேன். 2019-24 நிதியாண்டிற்கு இடையில் நமது மாநிலத்தின் பொருளாதாரத் திறமையின்மை, மோசமான நிர்வாகமின்மை, ஊழல் ஆகியவற்றைச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் உள்ளதையும், நான்கு வெள்ளை அறிக்கைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும் நான் விவாதித்தேன் என தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயடு இரண்டாவது முறையாக டெல்லி-க்கு சென்று உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயடு-வின் முந்தைய பயணத்திலிருந்து இது மாறுபட்டது.

இந்த சந்திப்பில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான நிதி ஆதாரத்தைக் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிக்கும் போது மறுசீரமைப்பு விதியில் சொத்துக்கள் பகிர்வு குறித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சந்திரபாபு நாயடு ஆந்திர பிரதேச மாநிலத்திற்காக 'special status’ உறுதி செய்வதற்கான பயணமாகவும் இது இருக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+