ஆந்திர மாநிலத்தின் TDP கட்சியின் கூட்டணியில் அமைந்துள்ள மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட்-டில் ஆந்திராவுக்கு சில முக்கியமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தில் 100 தொழில் பூங்காக்களை ஒவ்வொன்றும் குறைந்தது 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதோடு நிற்காமல் உணவு பதப்படுத்துதல், நீர்வளம், தோட்டக்கலை மற்றும் கனிமங்கள் சார்ந்த துறைகளிலும் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாட்டிலேயே அதிக தொழில் பூங்காக்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நாயுடு, மாநிலத்தில் தற்போது 53 பூங்காக்கள் மட்டுமே உள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பல தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) அடுத்த ஆறு ஆண்டுகளில் மாநிலத்தில் தொழிற் பூங்காக்களின் எண்ணிக்கையை 30 இல் இருந்து 60 ஆக இரட்டிப்பாகத் திட்டமிட்டுள்ளது என்று சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது 28 சிப்காட் தொழிற்துறை பூங்கா உள்ளது, இது கிட்டத்தட்ட 38,538 ஏக்கரில் அமைந்துள்ளது என சிப்காட் தளத்தில் அதிகார்பூர்மாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கே.செந்தில் ராஜ் கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் 30 தொழிற்பூங்காக்களை சிப்காட் நிர்வகித்து வருகிறது. இவை சுமார் 41,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இதில் 3,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த பூங்காக்களில் இயங்கி வருகின்றன எனத் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு கூடுதலாக 45,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி அதில் புதிய தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மோடி 3.0 ஆட்சி TDP கட்சியின் கூட்டணியில் அமைந்துள்ள காரணத்தால் பல திட்டங்கள் ஆந்திராவுக்கு சாதகமாக நடக்கிறது, இதில் முக்கியமானது ஒருங்கிணைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை. பாரத் பெட்ரோலியத்தின் (பிபிசிஎல்) அமைக்கும் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகத்திற்காக ஆந்திர மாநில அரசு மச்சிலிப்பட்டினம், ராமாயப்பட்டினம் அல்லது முலாபெட்டா ஆகிய பகுதிகளில் நிலம் ஒதுக்கலாம் என்று ஆந்திரப் பிரதேச அரசு மத்திய அரசிடம் கூறியுள்ளது.
ஆந்திராவில் 9 முதல் 12 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையைக் கட்டமைக்க பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. சுத்திகரிப்பு கட்டமைப்புகளைப் பொறுத்து, 9 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு ஆலைக்கு சுமார் 800 முதல் 1000 ஏக்கர் நிலம் தேவைப்படும்.
இந்த திட்டம் மாநில பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதுடன், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதால் அரசு நிலம் ஒதுக்கீட்டை விரைவுபடுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications