தமிழ்நாட்டின் பட்டாசு நகரமான சிவகாசி அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவர் ஆர்ஜி சந்திரமோகன். அவர் பிறந்த ஊர் ஒளியைத் தரும் தீப்பெட்டிகளை உருவாக்கினாலும் சந்திரமோகனின் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருள் சூழ்ந்துதான் இருந்தது.
அவரது தந்தை ஒரு சிறிய பலசரக்குக்கடையை நடத்தி வந்தார். சந்திரமோகனுக்கு படிப்பு ஏறவில்லை. பிடித்தமான கணக்குப் பாடத்தில் கூட பெயில். வாழ்க்கையில் ஜெயிக்க ஏதாவது செய்ய வேண்டும். படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

பின்னர் தனது 21 ஆவது வயதில் பூர்வீக நிலத்தை ரூ.13,000க்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் அவர் குச்சி ஐஸ், கப் ஐஸ்கிரீம் தொழிலைத் தொடங்க விரும்பினார். இதற்காக சென்னை ராயபுரத்தில் 250 சதுர அடியில் வாடகைக்கு ஒரு கடையைப் பிடித்தார். தனது பிராண்டுக்கு அருணோதயம் என பெயரிட்டார். அதைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டில் அருண் ஐஸ்கிரீம் பிறந்தது.
கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே தள்ளுவண்டியில் கொண்டு சென்று குச்சி ஐஸ், கப் ஐஸ்களை விற்க வேண்டும். இதுதான் சந்திரமோகனின் வியாபார ஐடியா. அருண் ஐஸ் விற்பதற்காக 6 டிரைசைக்கிள்களும், 15 தள்ளுவண்டிகளும் வாங்கப்பட்டு, 3 வேலையாட்கள் உடன் பிஸ்னஸ்-ஐ . தொடங்கினாற். முதல் ஆண்டிலேயே அருண் ஐஸ் சூப்பர் டூப்பர் ஹிட், முதலாண்டு லாபம் ரூ.1.5 லட்சம்.
சந்திரமோகனின் பேக்டரி காலையில் 10,000 ஐஸ்கிரீம் தயாரிக்கும், இரவு அவரது வீடாக மாறிவிடும். இந்த நிலையில் அவருக்கு கப்பல்களுக்கு ஐஸ்கிரீம், உணவு சப்ளை செய்பவர்களின் தொடர்பு கிடைத்தது. 197 வாக்கில் காலேஜ் கேன்டீன்கள், கப்பல் சப்ளையர்களுக்கு அருண் ஐஸ்கிரீம் பிரபலமாகிவிட்டது.
1981 ஆம் ஆண்டில் அருண் ஐஸ் ரூ.4.25 லட்சம் வருவாயை எட்டியது. இதைத் தொடர்ந்து தனது ஐஸ் மற்றும் பால் பண்ணையை விரிவுபடுத்த வேண்டும் என்று உணர்ந்தார். உடனடியாக அருண் ஐஸ் கிரீம்ஸ் தொடங்கப்பட்டது சந்திரமோகன் பால்சார்ந்த ஐஸ் கிரீம்களை விற்க நினைத்தார். ஆனால் அது அவ்வளவு சுலபமாகப் படவில்லை.
காரணம், அப்போது தென்னிந்தியாவில் தாசப்பிரகாஷ், குவாலிட்டி, ஜாய் ஐஸ் கிரீம்கள் விற்பனையில் கொடி கட்டிப் பறந்தன. மொத்தம் 350 ஐஸ்கிரீம் பிராண்டுகள் இருந்தன. ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு விஷயத்தை சந்திரமோகன் செய்தார்.
ஐஸ் கிரீம் பேக்குகளை அரிசியில் வைத்து தமிழ்நாடு முழுவதும் ரயில்களில் அனுப்பினார். இதனால் கிராமப்புறங்களுக்கும் அவரது பிராண்டு சென்றடைந்தது. இதன் மூலம் அவரது வியாபாரம் பெருகி கொழுத்த லாபத்தைப் பார்த்தார்.
1985 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஐஸ் கிரீம் கம்பெனியாக அருண் ஐஸ் கிரீம் உருவெடுத்தது. 1995இல் கேரளா, ஆந்திராவுக்கு வியாபாரத்தை விரிவு படுத்தினார். தென்னிந்தியாவில் 700 பார்லர்கள் மூலம் ஐஸ் கிரீம் விற்கப்பட்டது.
இந்த நிலையில் ஆரோக்கிய பிராண்டில் பால் விற்பனையையும் சந்திரமோகன் தொடங்கினார். 2001இல் அருண் ஐஸ் கிரீமும், ஆரோக்கியாவும் சேர்ந்து ரூ.100 கோடி பிசினஸ் ஆகியது.
இதனிடையே ஐபாகோ என்ற பெயரில் பிரீமியம் ஐஸ் கிரீம் பார்லர்களை அவர் தொடங்கினார். வாடிக்கையாளர்கள் கேட்க கேட்க ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. ஐஸ் கிரீம்களை வாங்குவதற்கு முன்பதிவு செய்யப்படும் என விளம்பர பேனர்களை அமைத்தார்.
இதனால் 2014இல் அருண் ஐஸ் கிரீம் விற்பனை ரூ.2000 கோடியை எட்டியது. அதே ஆண்டில் பங்குச் சந்தையிலும் கம்பெனி லிஸ்ட் செய்யப்பட்டது. 2020 ஏப்ரல் 5 ஆம் தேதிப்படி அருண் ஐஸ் கிரீம் மற்றும் ஹாட்சன் பால் விற்பனையின் வருமானம் ரூ.5000 கோடியைத் தொட்டது. 2800 ஐஸ் கிரீம் பார்லர்களை சந்திரமோகன் அமைத்தார். சூப்பர் பாப்புலரான ஐ பால்ஸ், ஐ பார் மினிஸ் என்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்.
இன்றைக்கு ஹாட்சன் நாட்டின் மிகப் பெரிய தனியார் பால் நிறுவனமாக உள்ளது. 10,500 பால் வங்கிகள், 50,000 ஊழியர்கள், 14 உற்பத்தி ஆலைகள் சுமார் 12,000 கிராமங்களில் நிறுவப்பட்டுள்ளன. தினமும் 60,000 லிட்டர் ஐஸ் கிரீம் தயாரிக்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications