தினக்கூலி தொழிலாளர்களுக்கு Linkedin தளத்தை உருவாக்கிய சந்திரசேகர்..!

தில்லியில் அன்று காலையில் இருந்தே சரியான மழை பெய்து கொண்டிருந்தது. அண்மையில் பைனான்ஸ் வேலையை தொடங்கிய சந்திரசேகர் மண்டல் தனது ஆபிஸ் பால்கனியில் நின்றபடி குளிருக்கு இதமான டீயை சுவைத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருந்த மண்டலை வாழ்க்கையின் யதார்த்தம் வெறித்துப் பார்த்தது.

கடுமையான மழையில் இவர் ஒரு கார்ப்பொரேட் ஊழியராக வாழ்ந்து கொண்டிருக்க ஏராளமான மக்கள் ஒதுங்க இடம் இல்லாமல் வெளியே அவரது அலுவலகத்துக்கு எதிரே தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாம் தினக்கூலிகள். தங்கள் வாழ்க்கையில் என்றைக்காவது ஒளி வரும் என்ற நம்பிக்கையில் ஒரு ஒட்டு டீ கடை கூரை அருகே ஒதுங்கியிருந்தனர்.

தினக்கூலி தொழிலாளர்களுக்கு Linkedin தளத்தை உருவாக்கிய சந்திரசேகர்..!


இதைப் பார்த்த சந்திசேகருக்கு பிஹாரில் அவரது குழந்தைக்கால நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன. இதேபோலத் தான் அவரது உறவினர்களும் அன்றாடம் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியிருந்தனர். இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் நல்ல வேலை என்பதே கிடைக்காதா என்ற வேதனையுடன் நினைத்துக் கொண்டார் சந்திரசேகர் மண்டல்.

இரண்டு மாதங்கள் கழித்து கோவிட் முடக்கம் வந்ததால் இந்த கூலியாட்கள் மேலும் துன்பத்துக்கு ஆளாகினர். பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தங்களது சொந்த ஊரை அடைந்தனர். இதைத் தொடர்ந்து 29 வயதான சந்திரசேகர் மண்டல் இந்த பாவப்பட்ட கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். அதன் மூலம் அவர்கள் ஒரு கௌரவமான வாழ்க்கையை தொடர வேண்டும் என விரும்பினார்.

ஓராண்டு கழித்து அவர் நினைத்தபடியே டிஜிட்டல் லேபர் சௌக் எனும் ஆன்லைன் பிளாட்பார்மை தொடங்கினார். அதில் தினசரி கூலிகளுக்கான வேலைகள், சாலையில் காத்துக் கிடப்பவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வேலைகள் இந்த தளத்தின் மூலம் செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் தனது நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிலையான வருமானத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று சந்திரசேகர் கூறினார்.

பிஹாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஆமி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மண்டல். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர்.
பிஹாரின் ஊரகப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. அவரது சித்தப்பா பல ஊர்களுக்கு சென்று வேலைக்காக அலைந்தது அவரது உள்ளத்தை பாதித்திருந்தது. நான்கு நாதங்களுக்கு மேலாக சந்திரசேகர் வேலைவாய்ப்பு மையங்களில் செலவிட்டார்.

இந்த மையங்களில் தினமும் 100 ஆண்கள், பெண்கள் வந்து குவிகின்றனர். காலையில் 9 மணிக்கே வந்து தங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர். சிலருக்கு வேலை கிடைக்கும். பலருக்கு கிடைக்காது. பாதிபேருக்கு மதிய சாப்பாடு கூட இருக்காது என்று சந்திரசேகர் கூறினார்.
கோவிட் முடக்கத்தின் போது வீட்டிலிருந்த சந்திரசேகர் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வேலையின்றி தவிப்பதை பார்த்தார்.

மும்பையில் கட்டட வேலை பார்த்து வந்த சுமித் குமார் கோவிட் காரணமாக ஒரு வாரம் நடந்தே சென்று சொந்த ஊருக்கு திரும்பினார். அந்த ஒரு வாரம் எனது வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான நேரம் ஆகும். யாருமே எனக்கு உதவ முன்வரவில்லை.

இருந்தாலும் இரக்கம் நிறைந்த சிலரது உதவியால் நான் உயிர் பிழைத்தேன். அத்தோடு இனி மும்பைக்கு செல்லவே கூடாது என்று முடிவெடுத்தேன் என்றார் சுமித் குமார். விவசாயத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு உள்ள துறை என்றால் கட்டுமானத் தொழில்தான். 71 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்தது.

லிங்க்டுஇன், நாக்ரி, இன்டீட் போன்ற தளங்கள் மூலம் ஒயிட் காலர் வேலைகளை பெற முடிந்தால் ஏன் புளூ காலர் வேலைகளை தேட முடியாது என்று யோசித்த சந்திரசேகர் மண்டல் தினசரி கூலிகளுக்காக அப்படியொரு வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்க முடிவெடுத்தார். வீட்டிலிருந்தபடியே தங்களுக்கு பிடித்த வேலைகளை அதன்மூலம் தேர்வு செய்ய வகை செய்ய வேண்டும் என நினைத்தார்.

இதைத் தொடர்ந்து தனது வேலையை விட்டுவிட்டு 2020 செப்டம்பரில் ரூ.20000 முதலீடு செய்து தனது முயற்சியை தொடர்ந்தார். இது அவரது குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. சிஏ இன்டர் முடித்துவிட்டு பைனல் படிக்காமல் இப்படி இருப்பது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் சந்திரசேகர் மனம் தளரவில்லை. முதல் சில மாதங்கள் சிரமமாக இருந்தது.

டிஜிட்டல் லேபர் சௌக் பிரைவேட் லிமிடெட் (Digital Labour Chowk) என்ற பெயரில் தனது நிறுவனத்தை தொடங்கிய சந்திரசேகருக்கு முதன்முதலாக புணேயை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் நிதியுதவி தந்தது. அந்த ஸ்டார்ட் அப் ஆகஸ்ட் 2021இல் ரூ.10 லட்சத்தை சந்திரசேகரின் நிறுவனத்தில் முதலீடு செய்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு நிதியுதவி கிடைக்கத் தொடங்கியது.

தனது வெப்சைட்டுக்கு சட்டப்பூர்வ மற்றும் டெக்னிகல் வேலைகளுக்கான விஷயங்களை செய்துவிட்டு 7 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினார். அதன் பின்னர் தொழிலாளிகளை ஈர்க்கும் வேலை தொடங்கியது.

பெரும்பாலான லேபர் சௌக்குகள் ஏதாவது மொபைல் கடை அல்லது பலசரக்கு கடைகளை வைத்திருந்தன. அப்படிப்பட்ட லேபர் சௌக்குகளுடன் உடன்பாடு செய்து கொண்டு தனது பிசினஸ் அசோசியேட்களாக டிஜிட்டல் லேபர் சௌக் சேர்த்துக் கொண்டது. இதன்மூலம் தொழிலாளர்களை ஆப்பில் ரிஜிஸ்டர் செய்யும் பணி நடைபெற்றது.

பெரும்பாலான தொழிலாளர்கள் பிஹாரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இனி அடிக்கடி வேலைக்காக அலையவேண்டிய அவசியம் இருக்காது என்று புரிய வைக்கப்பட்டது.

பல இடங்களில் கியாஸ்குகளை அமைத்து டிஜிட்டல் லேபர் சௌக் பற்றி விளம்பரம் செய்யப்பட்டது. பல கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு காண்ட்ராக்டர்கள், புராஜக்ட் மேனேஜர்களை பெற்றுத் தந்தது.
100க்கும் மேற்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் குரூப்களுடன் பேஸ்புக்கில் சேர்ந்து கஸ்டமர்களை சேர்த்தனர்.

இந்த பிளாட்பார்ம் கட்டுமான கம்பெனிகளுக்கான தொழிலாளர்கள், கொத்தனார்கள், பெயிண்டர்கள், கார்பென்டர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து தந்தது. வேலை இடம், வேலை விவரம், தினசரி கூலி, வேலை நாட்கள், தங்குமிடம், உணவு வசதிகள் பற்றி கஸ்டமர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் தங்களது விவரங்களை வேலை தரும் கம்பெனிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி இருந்தது. வேலையாட்களின் திறன்கள், அனுபவம், எதிர்பார்க்கும் கூலி போன்ற விவரங்களை ஆப்பில் பதிவேற்றலாம். டிஜிட்டல் லேபர் சௌக் தொழிலாளர்களுக்கான டிஜிட்டல் லேபர் கார்டுகளை தயாரித்து தந்ததால் அதன் மூலம் அவர்களுக்கான அடையாள அட்டையும் கிடைத்தது.

டிஜிட்டல் லேபர் சௌக்கில் 10 வாய்ப்புகளை இலவசமாக தொழிலாளர்கள் பெறலாம். அதன் பிறகு சிறிய தொகையை சந்தாவாக செலுத்த வேண்டும்.

ஸ்டார்ட் அப் பிஹார், ஸ்டார்ட் அப் இந்தியா, சிட்டிபேங்க் இன்னும் பல நிறுவனங்களின் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் சந்திரசேகர் மண்டலின் இந்த சேவை தொடர்கிறது.


Story Written by: jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+