இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை துறை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ், மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள போகிறது. ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஒட்டுமொத்தமாக ஐடி சேவை துறையை அழிக்க போகும் நிலை உருவாகியிருக்கும் வேளையில் டிசிஎஸ் நிறுவனத்தை காப்பாற்ற சந்திரசேகரன் களத்தில் இறங்கியுள்ளார்.
டாடா குழுமத்தின் சேர்மனும் TCS-ன் முன்னாள் சிஇஓ-வுமான என் சந்திரசேகரன் இப்போது TCS-இன் செயற்கை நுண்ணறிவு (AI) வர்த்தக உத்தியில் நேரடியாகவும் தீவிரமாகவும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இது TCS மட்டுமல்ல, முழு டாடா குழுமத்தின் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

TCS என்பது டாடா குழுமத்தின் மிகப்பெரிய வருவாய் ஆதாரம் கொண்ட ஒரு பிரிவாகும், இந்த பிரிவு சரிந்தால் டாடா குழுமத்தின் மொத்த வர்த்தகமும், வளர்ச்சியும் பாதிக்கும். இதனால் ஏஐ அலையில் டிசிஎஸ் நிறுவனத்தை எந்த கட்டத்திலும் இழந்துவிட கூடாது என்பதற்காக என் சந்திரசேகரன் நேரடியாக டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாட்டில் கவனம் செலுத்த உள்ளார்.
இதனால் தற்போதையை டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் மற்றும் சிஓஓ ஆர்த்தி சுப்ரமணியன் ஆகியோரின் பதவிக்கு ஆபத்தா என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. மேலும் என் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிர்வாகத்தில் என்ன செய்ய போகிறார்..? ஏஐ அலையில் இருந்து எப்படி காப்பாற்றப்போகிறார்..?
AI ஏன் IT துறையை இப்படி உலுக்குகிறது?
பல ஆண்டுகளாக TCS போன்ற நிறுவனங்கள் சாப்ட்வேர் கோடிங், IT அமைப்புகளை நிர்வகித்தல், நீண்டகால தொழில்நுட்ப சேவைகளை உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்டி வந்தன. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் இந்த வேலைகளில் பலவற்றை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் செய்யத் தொடங்கியுள்ளன.
இதனால் காலம் காலமாக பயன்பாட்டில் இருந்து வரும் IT சேவை மாடல் (legacy business model) இனி அப்படியே தொடர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சில AI நிறுவனங்கள் கூட நேரடியாக TCS-ஐப் போன்ற சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றத்தை சந்திரசேகரன் மிகத் தீவிரமாகக் கவனித்து வருகிறார். TCS-ஐ AI அலையில் எந்த விதத்திலும் பின்தங்காமல் முன்னிலையில் நிறுத்த வேண்டும் என்பதே அவரது இலக்கு.
TCS-ஐ டாடா குழுமத்தின் AI மையமாக்கும் திட்டம்
சந்திரசேகரன் இப்போது TCS-இன் AI உத்தியை நேரடியாக வழிகாட்டி வருகிறார். அவரது முக்கிய திட்டங்களில் ஒன்று - டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் (டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியா, டாடா ஸ்டீல் உள்ளிட்டவை) TCS-ஐ இனி நிரந்தர AI மற்றும் தொழில்நுட்ப பங்குதாரராக (default AI partner) மாற்றுவது தான்.
இதன் மூலம் குழுமத்தின் அனைத்து தொழில்களும் AI-யை வேகமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் டிசிஎஸ்-ம் அனைத்து துறையிலும் ஏஐ அடிப்படையிலான சேவையில் அனுபவத்தை பெறும்.
மேலும், AI தொடர்பான சிறிய நிறுவனங்களை வாங்குவதற்கான (acquisitions) திட்டங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. இது TCS-இன் AI திறன்களை வேகமாக வளர்க்க உதவும். மேலும் துபாயில் நடந்த முக்கிய நிகழ்த்தியில் "டிசிஎஸ் இனி பழைய வியாபார மாதிரியை அப்படியே வைத்திருக்க முடியாது" என்று டிசிஎஸ் உயர் அதிகாரிகளுக்கு என் சந்திரசேகரன் தெளிவாகக் கூறியுள்ளார். இதனால் டிசிஎஸ் நிறுவனத்தில் ஏஐ துறை சேவைகளை மேம்படுத்தவும், அதன் வேகமான செயல்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
டாடா குழுமத்திற்கு TCS எவ்வளவு முக்கியம்?
TCS-இலிருந்து வரும் ஈவுத்தொகை (dividends) தான் டாடா குழுமத்தின் பிற தொழில்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. TCS-இன் நிலை பலவீனமடைந்தால், முழு குழுமத்திற்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, AI-யின் சவாலை எதிர்கொண்டு TCS-ஐ எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது டாடா சன்ஸ் (Tata Sons) நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாக மாறியுள்ளது. இந்த நடவடிக்கை TCS-ஐ வலுப்படுத்துவதோடு, டாடா குழுமம் முழுவதையும் AI யுகத்திற்கு தயாராக்கும்.

ஊழியர்களுக்கு சந்திரசேகரனின் எச்சரிக்கை
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட TCS ஊழியர்களிடம் சந்திரசேகரன் உரையாற்றினார். "அனைவரும் தொடர்ந்து AI தொடர்பான புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பழைய திறன்கள் மட்டும் போதாது" என்று அவர் வலியுறுத்தினார். இந்த மாற்றத்தில் ஊழியர்களின் பங்கு மிக முக்கியம் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
AI பவர் செயல்படுத்தும் பொறுப்பில் யார்?
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு TCS-இன் CEO கே. கிருதிவாசன் (K Krithivasan) மற்றும் COO ஆர்த்தி சுப்ரமணியன் (Aarti Subramanian) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவரும் சந்திரசேகரனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிய நம்பிக்கையான தலைவர்கள் என்பதால் என்.சந்திரசேகரன் வழிக்காட்ட இவ்விருவரும் செயல்படுத்துவார்கள்.
எதிர்காலத்திற்கான முக்கியமான படி
இந்த நடவடிக்கை TCS-ஐ AI-யின் சவால்களிலிருந்து பாதுகாத்து, டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கியமான முயற்சியாகும். AI தொழில்நுட்பம் வேகமாக வளரும் இந்த காலகட்டத்தில், பாரம்பரிய IT நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் பின்தங்கிவிடும் அபாயம் உள்ளது.
சந்திரசேகரனின் நேரடி தலையீடு TCS-ஐ இந்த மாற்றத்திற்கு தயார்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனத்தை எதிர்காலத்திற்கு வலுவாக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, இந்திய IT துறைக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications