இந்திய விண்வெளித் துறையை சேர்ந்த நிறுவனங்கள் புதன்கிழமை பெருமைக்கு உரிய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முக்கியமான கட்டத்தை அடைய உள்ளது, முன்னதாக ரஷ்யா இதில் பெரும் தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது உலக நாடுகள்.
சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி வெற்றி அடைந்தால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தளத்திற்கு புதிய மகுடம் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு முன்னோடியாக இந்தியா இருக்கும். மேலும் இது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த நிலையில் ப்ளூம்பெர்க் முக்கியமான ஒரு ஆய்வை செய்து வெளியிட்டு உள்ளது, சந்திரயான் -3 விண்கலம் மற்றும் அதன் ராக்கெட் தயாரிப்பில் தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் முதல் உலோகங்கள், கருவிகள் வரையிலான பல்வேறு உபகரணங்களை வழங்கிய 13 இந்திய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் மட்டும் சந்தை மதிப்பில் 2.5 பில்லியன் டாலருக்கு மேல் சேர்த்துள்ளது.
சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்துக்கொள்ள மிகவும் முக்கியமான சம்பவம் இது. அதாவது சந்திரயான் -3 திட்டத்தில் வெளியில் இருந்து பணியாற்றிய ISRO ஊழியர்கள் கடுமையான உழைப்பை போட்டு உள்ளனர். இவர்களுக்கு வெளியில் இருந்து பல நிறுவனங்கள் உதவியுள்ளது.
இப்படி சந்திரயான் -3 திட்டத்திற்கு உதவிய 13 நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. சந்திரயான் -3 திட்டத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO-வின் சந்திரயான் -3 ராக்கெட் புதன்கிழமை மாலை நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்க முயற்சிக்க உள்ளது. ரஷ்யாவின் இதேபோன்ற முயற்சி தோல்வியில் முடிந்த பின்னர், இதுவரையில் யாரும் செல்லாத ஒரு பகுதிக்கு இந்தியா பயணிக்க உள்ளது.
இந்த நிலையில் சந்திரயான் -3 விண்கலம் உருவாக்க முக்கிய சப்ளையர்களின் பட்டியலில் சில.. எரிவாயு நிறுவனமான லிண்டே பங்குகள் இந்த வாரம் 23% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த பணிக்கான முக்கியமான மாடியூல் மற்றும் சிஸ்டம் வழங்கிய சென்டம் எலெக்ட்ரானிக்ஸ், கிட்டத்தட்ட 11% உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வழங்குநரான Avantel 12% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மூன் மிஷன் போன்ற முக்கியமான திட்டங்களில் பங்கேற்பது இந்த பிரிவில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
மேலும் இத்திட்டத்தின் வெற்றியின் மூலம் இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளுக்கும் உதவி செய்யும், முக்கிய சப்ளையராக உயர முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications