சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. சந்திரயான் நிலவில் தரையிறங்கிய லைவ் வீடியோ பார்க்கும் அனைவருக்கும் மெய்சிலிர்க்கும் தருணமாக இருந்தது, சொல்லபோனால் எம்எஸ் தோனி சிக்ஸ் அடைத்து உலக கோப்பையை கைப்பற்றிய தருணத்தை விடவும் அற்புதமாக இருந்தது சந்திரயான் நிலவில் இறங்கிய தருணம்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியில் கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான தனியார் நிறுவனங்களின் பங்கு உள்ளது என்றால் மிகையில்லை. இஸ்ரோ தலைமையில் தான் அனைத்து பணிகளும் நடைப்பெற்றாலும் கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வொர்க்ஸ் போன்ற பல நிறுவனங்கள் இத்திட்டத்திற்காக பணியாற்றியுள்ளது.

கோயம்புத்தூரில் Chakradhara Aerospace என்ற ஒரு நிறுவனம் இயங்கி வருவது பலருக்கும் தெரிந்திருந்தாலும், பொரும்பாலானோருக்கு தெரியாது, சந்திரயான் 3 வெற்றியை கொண்டாட Chakradhara Aerospace நிறுவனத்திற்கு தனிப்பட்ட உரிமை உள்ளது என்றால் மிகையில்லை.
சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சந்திரயான் 3 திட்டத்தில் இன்ஜின் மாடியூல், டாராக் மோட்டார்ஸ், பிரஷர் டிரான்ஸ்டியூசர்ஸ் ஆகியவற்றை தயாரித்துக் கொடுத்துள்ளது. இதுக்குறித்து சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான லட்சுமி மெஷின் வொர்க்ஸ் CSO அதிகாரியான சவுந்தரராஜன் கூறுகையில் இந்தியா மற்றும் இஸ்ரோவின் வெற்றியை கண்டு பெருமைப்படுகிறோம் என தெரிவித்தார்.
சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏரோஸ்பேஸ் துறைக்கான உபகரணங்களை தயாரித்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் 2016 முதல் இஸ்ரோ-வுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது இந்நிறுவனம். சந்திரயான் திட்டத்திற்கு தேவையான துல்லியமான கருவிகளை தயாரிக்க சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் ஸ்டேட் ஆப் தி ஆர்ட் டெக்னாலஜியும், இதை சிறப்பாக செயல்படுத்த அணியும் கொண்டு உள்ளது.
சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் கருவிகளும், கூட்டணியும் சந்திரயான் 3 திட்டத்தில் மட்டும் அல்லாமல் பல முக்கியமான திட்டத்திலும் ஈடுபட்டு உள்ளது. விக்ரம் லேண்டரிலும் சக்ரதாரா ஏரோஸ்பேஸ் கருவிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் தொழிற்துறை அடையாளங்களில் முக்கியமான ஒன்று LMW, ஜெர்மனிக்கு BMW என்றால் கோயம்புத்தூருக்கு LMW என பலர் கூறியது நினைவிருக்கிறது. 1968 ஆம் ஆண்டு டெக்ஸ்டைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையாக உருவான லட்சுமி மெஷின் வொர்க்ஸ் தற்போது ஏரோஸ்பேஸ் துறை வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில் லட்சுமி மெஷின் வொர்க்ஸ்-ன் கிளை நிறுவனமான சக்ரதாரா ஏரோஸ்பேஸ் 2004 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. Chakradhara Aerospace and Cargo Private Limited (CACPL) நிறுவனம் தற்போது பாதுகாப்பு துறை, ஏரோஸ்பேஸ் துறை, விண்வெளி துறைக்கான கருவிகளை தயாரித்து வருகிறது.
சந்திரயான் 3 திட்டத்தில் பங்குக்கொண்ட கோயம்புத்தூர் சக்ரதாரா ஏரோஸ்பேஸ் மட்டும் அல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ் குட்ரிட்டன்ஸ் சார்பாக ஒரு சல்யூட்..!!


Click it and Unblock the Notifications