சந்திரயான் 3-ல் பணியாற்றிய கோயம்புத்தூர் நிறுவனம்.. வாவ்..!

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆந்திரா-வின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாடில் இயக்கும் ISRO சந்திரயான்-2 திட்டத்தை சுமார் 960 கோடி ரூபாய் முதலீட்டில் செய்து முடித்த நிலையில், தற்போது சந்திரயான் 3 திட்டத்தை வெறும் 600 கோடி ரூபாய்க்கு கட்டமைத்துள்ளது. இந்த திட்டத்தில் இஸ்ரோ மட்டும் அல்லாமல் வெளியில் இருந்து பல நிறுவனங்கள் உதவியுள்ளது. இதில் முக்கியமாக கோயம்புத்தூர் நிறுவனம் பணியாற்றியுள்ளது.

சந்திரயான் 3-ல் பணியாற்றிய கோயம்புத்தூர் நிறுவனம்.. வாவ்..!

இந்தியாவின் முன்னணி EPC திட்டங்கள், உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனம் வியாழக்கிழமை, ISRO சந்திரயான்-3 திட்டத்திற்கு இந்நிறுவனம் பல்வேறு விஷயங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

லார்சன் & டூப்ரோ (L&T) கிட்டத்தட்ட 50 ஆண்டுக்களுக்கும் மேலாக இஸ்ரோ உடன் பணியாற்றி வருகிறது. LVM3 M4 சந்திரயான் மிஷன்-ஐ லான்ச் செய்வதில் L&T முக்கியப் பங்கு வகிக்கிறது எனவும், விண்கலத்தின் சப்சிஸ்டம் தயாரிப்பதில் இருந்து மிஷன் டிராக்கிங் செய்வது வரையில் லார்சன் & டூப்ரோ பணியாற்றியுள்ளது என்பது சாதனையாக கருதுகிறது L&T நிறுவனம்.

சந்திரயான் 3-ல் பணியாற்றிய கோயம்புத்தூர் நிறுவனம்.. வாவ்..!

L&T நிறுவனம் 3.2 மீட்டர் விட்டம் கொண்ட ஹெட் எண்ட் செக்மென்ட், மிடில் செக்மென்ட் மற்றும் நோசில் பக்கெட் ஃபிளேன்ஜ் ஆகிய முக்கியமான பூஸ்டர் பிரிவுகள் தயாரிக்கப்பட்டு, போவாயில் உள்ள எல்&டி தொழிற்சாலையில் ப்ரூஃப் பிரஷர் டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இதேபோல் கோயம்புத்தூரில் உள்ள எல்&டி-யின் ஹைடெக் ஏரோஸ்பேஸ் உற்பத்தி நிலையத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தரை மற்றும் விமானத் umbilical plates-ஐ சப்ளை செய்துள்ளது. மேலும் இஸ்ரோ-வின் லான்ச் வெஹிக்கல்-ன் சிஸ்டம் ஒருங்கிணைப்பில் L&T முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+