இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ-வின் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தின் தரைபகுதியில் மிகவும் முக்கியமான விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு, விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிந்த, பிரக்யான் என்னும் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவான பாதையை உருவாக்கும்.

சந்திரயான் 2 திட்டம் பாதியிலேயே தோல்வி அடைந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தை எப்படியாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும் என்பதற்காக மிஷன் டைரெக்டராக தமிழரான பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில் தற்போது சந்திரயான் 3 திட்டம் வெற்றியின் வாசலை தொட உள்ளது. சந்திரயான் 3 திட்டம் விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது. இதேபோல் இதுவரையில் யாரும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்க உள்ளது.
இஸ்ரோவின் இந்த வரலாற்று முயற்சிக்கு பல நிறுவனங்கள் உதவி செய்துள்ள நிலையில் இந்த நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பல முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 குறித்து கடந்த ஒரு வார டிரெண்டில் 20000 கோடி ரூபாய் சந்தை மதிப்பீடு அதிகரித்துள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தில் லார்சன் & டூப்ரோ, மிஸ்ரா தாது நிகம், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எம்டிஏஆர் டெக்னாலஜிஸ் ஆகியவை அடங்கும். கடந்த ஒருவாரத்தில் BHEL நிறுவன பங்குகளை தவிர, பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது.
L&T நிறுவனத்தின் பங்கு: சந்திரயான் 3 திட்டத்தின் LVM3 M4 ராக்கெட்டில் ஹெட் எண்ட் செக்மென்ட், மிடில் செக்மென்ட் மற்றும் நோசில் பக்கெட் ஃபிளேன்ஜ் போன்ற முக்கியமான பூஸ்டர் பிரிவுகளை தயாரித்து சோதனை செய்துள்ளது.
Mishra Dhatu Nigam நிறுவனத்தின் பங்கு: கோபால்ட் மற்றும் நிக்கல் அடிப்படை உலோகக் கலவைகள், டைட்டானியம் உலோகக் கலவைகள் மற்றும் LVM3/M4 ஏவுகணை வாகனத்தின் பல்வேறு கூறுகளுக்கான சிறப்பு இரும்புகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
BHEL நிறுவனத்தின் பங்கு: சந்திரயான் 3 திட்டத்தின் பேட்டரி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
Hindustan Aeronautics நிறுவனத்தின் பங்கு: இந்த நிறவனம் நேஷ்னல் ஏரோஸ்பேஸ் லேப்ஸ் உடனும், எல் அண்டி டி உடனும் இணைந்து PSLV ராக்கெட்-ஐ கட்டமைத்தது.
Walchandnagar Industries பங்கு: LVM3 ராக்கெட்டின் முக்கியமானs200 பூஸ்டர் பிரிவு மற்றும் பல்வேறு சப்சிஸ்டம்ஸ் சந்திரயான் 3 திட்டத்திற்காக உருவாக்கியுள்ளது.
MTAR Technologies நிறுவனத்தின் பங்கு: சந்திரயான் 3 திட்டத்திற்காக பல்வேறு உரிதிபாகங்களை தயாரித்துக்கொடுத்துள்ளது. இப்படி பல நிறுவனங்கள் சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications