சந்திரயான் 3 மூலம் யாரும் எட்ட முடியாத உச்சத்தை அடைந்துள்ளது இந்தியா. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா இதுவரையில் செய்திடாத வகையில் யாரும் அடையாத தென் துருவத்தை அடைந்தது முதல் சாப்ட் லேண்டிங்-ஐ சாத்தியப்படுத்தியது வரையில் அனைத்துமே சாதனை தான். இந்த நிலையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை பங்குசந்தை முதலீட்டாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பாதுகாப்பு மறறும் ஏரோஸ்பேஸ் நிறுவன பங்குகள் சுமார் 17 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் பல பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்று அதிகப்படியான லாபத்தை பெற்று வருகின்றனர்.

இதில் முக்கியமாக பராஸ் டிபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 17 சதவீதம் உயர்ந்து 841.80 ரூபாய் விலையை எட்டி 52 வார உயர்வை தொட்டு உள்ளது. இதன் மூலம் பராஸ் டிபென்ஸ்-ன் சந்தை மதிப்பு 3100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் 717.60 ரூபாய் அளவில் முடிந்தது.
MTAR Technologies பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து தனது வரலாற்று உச்ச அளவான 2450 ரூபாயாக உயர்ந்து, அதன் சந்தை மதிப்பு 7500 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் இன்ஜின் மற்றும் cryogenic இன்ஜின்களின் கோர் பம்புகளின் முக்கிய பகுதிகளை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்த் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து 52 வார உயர்வை தொட்டு, 135.55 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது, கடந்த ஒரு வாரத்தில் 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன பங்குகள் 3 சதவீதமும், பாரத் டைனமிக்ஸ் பங்குகள் 2 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இதோடு Astra Microwave மற்றும் Apollo Micro Systems ஆகியவை கிட்டத்தட்ட 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. Ideaforge Technology பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, மேலும் அதிகம் வெளியில் தெரியாமல் பாதுகாப்பு மறறும் ஏரோஸ்பேஸ் பிரிவில் இருக்கும் Sika Interplant System மற்றும் NIBE ஆகியவை அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications