சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கப்பட உள்ளது, பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு, பல ஆயிரம் மக்களின் கடும் உழைப்பு ஆகிய அனைத்திற்கும் அடுத்த சில மணிநேரத்தில் பதில் கிடைத்து விடும்.
இதுவரையில் நிலவின் தென் துருவப் பகுதியில் யாரும் களமிறங்காத நிலையில் சந்திரயான் 3 விண்கலம் இன்று வரலாறு படைக்க உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) படி, சந்திரயான் 3 விண்கலம் சுமார் 18:04 மணி நேரத்தில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்டு சரியான நேரத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோவின் முந்தைய நிலவு பயணத்தில், சந்திரயான்-2 இன் விக்ரம் லேண்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது. சந்திரயான் - 3 திட்டம் 2019 இன் சந்திரயான் -2 மிஷன் திட்டத்தில் கற்ற பாடங்கள் அனைத்தையும் கொண்டு சிறப்பான திட்டமிடல் உடன் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், இந்த முறை விஞ்ஞானிகள் அதே தவறுகளைத் தவிர்க்க சந்திரயான் -3 விண்கலத்தை உருவாக்குவதில் சில மாற்றங்களைச் செய்திருப்பதால், பாதுகாப்பான சாஃப்ட் லேண்டிங் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி ஏன் மிகவும் முக்கியம்.
நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் போட்டியில் பல நாடுகளும், தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில், ரஷ்யாவின் லுனா-25 நிலவின் மேற்பரப்பில் விபத்துக்குள்ளானது.
இதேபோல் ஏப்ரல் மாதம், நிலவில் தரையிறங்க முயன்ற ஜப்பானிய நிறுவனத்தின் விண்கலம் விபத்துக்குள்ளானது. ஒரு இஸ்ரேல் நாட்டின் இலாப நோக்கற்ற நிறுவனம், 2019 இல் இதேபோன்ற சாதனையை அடைய முயற்சித்தது, ஆனால் அதன் விண்கலம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
நிலவில் தென் துருவத்தில் இதுவரையில் யாரும் சாப்ட் லேண்டிங்-ஐ செய்தது இல்லை, மேலும் தென் பகுதியில் இதுவரையில் எந்த நாடும் பெரிய அளவில் ஆய்வு செய்தது இல்லை. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவின் பூமத்திய ரேகைப் பகுதியில் மென்மையாக தரையிறங்க முயற்சித்தன, ஆனால் நிலவின் தென் துருவப் பகுதியில் அதை முயற்சிப்பது கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக கடினமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கினால், அது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு தனி மகுடத்தை வழங்குவது மட்டும் அல்லாமல், யாரும் அடைய முடியாத தென் துருவத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் முதல் நாடாக இந்தியா இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications